மட்டக்களப்புக்கு கரடியனாறு பகுதியில் 6 பேர் கைது

மட்டக்களப்புக்கு கரடியனாறு  பகுதியில் சட்டவிரோதமான முறையில் ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் மயிலம்பாவெளி விசேட அதிரடி படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து மணல் அகழ்விற்கு பயன்பபடுத்தப்பட்ட 3 உழவு இயந்திரங்களையும் விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் கரடியனாறு ஆற்றுப்பகுதியில் வைத்து 3 உழவு இயந்திரமும்,  அதில் மணல் எற்றியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றியவர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

மேலதிக விசாரணைகளை கரடியனாறு போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..