ஊடகவியலாளர்களுக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பான செயலமர்வு

தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் கிழக்குமாகாண ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு நாவலடி நியூ சண் ரைஸ் ஹோட்டலில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற இந்த செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர் .
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடக ஆலோசகரும் வளவாளருமான எம்.எஸ்.அமீர் ஹுசைன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் சட்டத்தரணி கே.ஐங்கரன் தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த செயலமர்வின் போது தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பிலான பூரண விளக்கம் வழங்கப்பட்டதுடன், சட்டம் குறித்த சந்தேகங்கள், நடைமுறைப்பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் நாடு முழுவதும் மாவட்ட, மாகாண ரீதியாக இது போன்ற தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொர்பான செயலமர்வுகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.