மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017 வருடாந்த ஒன்று கூடல்-படங்கள்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் 2016-2017  வருடாந்த ஒன்று கூடல் 06-05-2017 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு சின்ன உப்போடை அல்மெடா மண்டபத்தில் இடம்பெற்றது..

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளரும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் தலைவருமான பொறியியலாளர் வை.தர்மரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இவ் ஒன்று கூடலில் மட்டு- வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் உப தலைவரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளருமான ரீ.பத்மராஜா,சிரேஷ்ட பொறியியலாளர்களான கலைவாணி வன்னியசிங்கம்,ஜெயபாலினி தர்மரட்ணம் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளரும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் செயலாளருமான  ஏ.லிங்கேஸ்வரன்,மட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகார சபையின் சிரேஷ்ட கணக்காளர் சுஹைர், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் பொருளாளர் ரீ.சிவநேஸ்வரன் உட்பட ஊழியர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் ,அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களினால் பல்வேறு கலை  நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன் போது ஊழியர் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கும்,அவர்களின்  பிள்ளைகளுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டிய சிறுவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஒன்று கூடல் வருடா வருடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.