முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் முக்கியநோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்விடுதலை புலிகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்..
புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் இன்று நண்பகல் 12 மணியளவில் ஊடகசந்திப்பு ஒன்றை புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி கலையரங்கில் நடத்தினர்
இங்கு கருத்து தெரிவித்த அவர்கள்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும், எனவும் பொதுமக்களின் வாழ்வாதாரம் உட்பட ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும் என்பதே தமது நோக்கம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ்விடுதலை புலிகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இதய சுத்தியுடன் செயற்படவில்லை எனவும் குறித்த கட்சியின் குறிப்பிட்டுள்ளனர்.