ஒரு தலைப்பட்சமான காதல் காரணமாக ஏற்பட்ட கைகலப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 13 பேரை, நாளைவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா, சனிக்கிழமை (6) உத்தரவிட்டுள்ளார்..
காத்தான்குடி, ஆரையம்பதிப் பிரதேசத்தில் 23 வயதுடைய பெண்ணொருவரை 22 வயதுடைய இளைஞர் ஒருவர் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இந்த இளைஞரின் காதலை அப்பெண் விரும்பாத நிலையில், பெண் மற்றும் இளைஞரின் தரப்பினர்களுக்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.
இந்நிலையில், இரண்டு தரப்பினர்களையும் சேர்ந்த ஆண், பெண் அடங்கலாக 13 பேரைப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.
ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்த இளைஞர் தப்பியோடியுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
THX
-ரீ.எல்.ஜவ்பர்கான்
-tamilmirror.