இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி தலதா மாளிகை முன்னணியில்

இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி இலங்கையின் தலதா மாளிகை முன்னணியில் இருப்பதாக தியவதன நிலேமே பிரதீப் நிலங்க தேர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து மேள்கொள்ளப்படும் சர்வதேச சுற்றுலா தரவரிசையிலேயே தலதா மாளிகை முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

இது தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர்,
தொடர்ந்தும் நான்காவது முறை இந்தியாவின் தாஜ்மஹாலை பின்னுக்குத் தள்ளி தலதா மாளிகை முதலிடத்தில் இருக்கிறது.
இதேவேளை, இப்பொழுது நமது நாட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், சுற்றுலாத் துறை பெரும் விருத்தி கண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு 17.5 சதவீதமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்த ஏப்ரல் மாதத்தில் சுற்றுலா வந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து அறுபதாயிரத்து இரு நூற்று நாற்பத்து ஒன்பது பேர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.