சம்பூர் பிரதேசத்தில் மீழக்குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப்பிரச்சனைகளை முக்கியத்துவம் வழங்கி செயற்படுத்த வேண்டும்……அது நடைபெறவில்லை என கிழக்கு கல்வி அமைச்சர் கவலை தெரிவிப்பு.?

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் மீழ்க்குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப்பிரச்சனைகளை முக்கியத்துவம் வழங்கி செயற்படுத்த வேண்டும் என மீழ்குடியேற்ற அமைச்சின் செயலாளரை நான் நேரடியாகச்சென்று சந்தித்த போது கோரியிருந்தேன்.

ஆயினும் அது சாத்தியமாகவில்லை. என கிழக்கு மாகாண கல்வி ,மற்றும் மீழ்குடியேற்ற அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்..

இன்று( 6)மாலை திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இ.கி.ச.இந்துக்கல்லுாரி மண்டபத்தில் நடைபெற்ற ”சம்பூர் இடம்பெயர்வும் மீழ்குடியேற்றமும்”என்ற டாக்கடர் அருமைநாதன் ஸதீஸ்குமார் அவர்களின் நுால் வெளியீட்டில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பேசியபோதே மேற்கண்ட விடயத்தை தெரித்தார்.

சம்பூர் மகாவித்தியாலய முன்னாள் மாணவர்களின்  வெளியக சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் சி.ஜெயராசா தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனும்  கலந்துகொண்டார்.

இங்கு மேலும் பேசிய தண்டாயுதபாணி குறிப்பிடுகையில்,

இங்கு நாம் ஒரு விடயத்தை பாராட்டியாக வேண்டும். சம்பூர் மக்களின் நீண்டகால உறுதியான போராட்டமே சம்பூரை அவர்களுக்கு மீட்டுத்தந்தது.

இந்த விடயங்கள் இந்த நுாலிலே மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மீழகுடியேற்றத்தைப்பொறுத்தவரை இரண்டு கட்டங்களாக அது நடைபெற்றது.முதற்கட்டமாக குடியேற்றப்பட்டவர்களுக்கான தற்காலிக மனை மற்றும் வீட்டு வசதிகள் கிடைக்கப்பெற்றுவந்தாலும் இரண்டாம் கட்டமாக மீழக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வீட்டு வசதிகள் நிறைவேற்றப்படுவதில் பல தடங்கல்கள் சவால்கள் நிலவுகின்றது.

இது குறித்தும் இந்த மாவட்டத்தில் நிறைவேற்றவேண்டிய மீழ்குடியேற்றம் தொடர்பான தகவல்களை திரட்டி நான் மத்திய மீழ்குடியேற்ற அமைச்சின் நடவடிக்கை்கு அனுப்பிவைத்துள்ளேன்.

அதேவேளை குறித்த மக்களின் வீட்டுத்தேவைகளை முன்னுரிமை கொடுத்து வீட்டுத்திட்டத்தை செயற்படுத்து மாறு மீழ்குடியேற்ற அமைச்சின்  செயலாளரை நேரடியாக கோரியிருந்தபோதும் அது நடைபெறவில்லை.

இதனால் அந்த மக்கள் சிரமப்படுகின்றார்கள். இதுபோன்ற விடயங்களும் இந்த நுாலிலே தெளிவு படுத்தப்பட்டுள்ளது.எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.