மண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்-

க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பரிபாலனத்தின் கீழ் செயற்படும் மண்முனை கோட்டக்கல்வி அலுவலகத்தின் “தமிழ்மொழி தினம்-(2017)” சனிக்கிழமை (6.5.2017) காலை 8.45 மணியளவில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தலைமையில் புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது..

முதலில் அதிதிகளை தமிழ் பண்பாட்டு முறையில் மாலை அணிவித்து மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன்பின்பு தமிழ்மொழி தினம் தங்குதடையின்றி நடைபெறுவதற்கு மத அனுஸ்டானம் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாடறிந்த கவிஞரும்,மூத்த இலக்கியவாதியும்,தமிழ் பற்றாளுருமான கலாபூசணம் பொன்.தவநாயகம் அவர்களும்,சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,முன்னாள் வடகிழக்கு மாகாண கலாச்சார பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம் அவர்களும்,மற்றும் கௌரவ அதிதிகளாக முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி, வலயத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர்(முகாமைத்துவம்) சி.நடராஜா, உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்) த.யுவராஜன்,இலக்கிய ஆய்வாளர் கல்விக்கோர் வெல்லவூர் கோபால்,ஓய்வுபெற்ற உதவிக்கல்வி பணிப்பாளர் வி.தங்கத்துரை,விஷேட கல்வி இணைப்பாளர் எம்.தயானந்தம்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான பொன்.செல்வநாயகம்,எஸ்.ரவீந்திரன்,அதிபர்களான திலகவதி ஹரிதாஸ்,இராஜகுமாரி, அருமைத்துரை,அருட்பிரகாசம்,உட்பட 37பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,நடுவர்கள்,தீர்ப்பாளர்கள், மாணவர்கள்,கலந்துகொண்டார்கள்.இதன்போது தமிழ்மொழி வாழ்த்து,தலைமையுரை,என்பனவற்றுடன்,தமிழ்மொழித்தினப்போட்டியில் பேச்சு,வாசிப்பு,பாவோதல்,இசையும் அசைவும்,நடனம்,நாட்டார்பாடல்,வில்லுப்பாட்டு,கரகாட்டம்,உட்பட 44நிகழ்வுகள் நடைபெற்றது.முதலாம்,இரண்டாம்,மூன்றாம் இடங்களைப்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றீதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.