கிழக்குமாகாணகல்விப் பின்னடைவுக்குமாகாணக் கல்விஅமைச்சர் பொறுப்புக் கூற பகிரங்கவிவாதத்திற்குமுன்வரவேண்டும் – இலங்கைஆசிரியர் சங்கம்

அண்மையில் வெளியிடப்பட்டுள்ளக.பொ.த (சாஃத) பரீட்சை முடிவுகளின் படி கிழக்கு மாகாணம் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளதோடு கல்வி வளர்ச்சியில் முன்னிலையில் இருந்த கல்வி வலயங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளமைக்கு பொறுப்புக் கூற பகிரங்க விவாதத்திற்கு மாகாணக் கல்வி அமைச்சர் முன்வர வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஊடகங்களின் ஊடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். .

இலங்கையில் முன்னிலையில் இருந்த மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம் மிகமோசமான நிலைக்குதள்ளப்பட்டுள்ளதோடு,சகலமனித,பௌதீகவளங்களையும் கொண்டுள்ளமட்டக்களப்புகல்விவலயம் தேசியமட்டத்தில் மிகமோசமானவீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

வினைத்திறனற்றஅதிகாரிகளினால் வலயங்கள் அரசியல் மயமாக்கப்படுத்தப்பட்டு இருப்பதோடுசேவைப் பிரமாணக் குறிப்புகளுக்குஅமைவானசேவைப் பணிகளைஅதிகாரிகள் முன்னெடுக்கவில்லைஎனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மேலும் வினைத்திறனற்றகல்விஅதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மைகாரணமாகஅதிபர்கள்,ஆசிரியர்களின் அடிப்படைஉரிமைகள் தொடர்ச்சியாகமீறப்பட்டுமனிதஉரிமைஆணைக்குழு,மேல் நீதிமன்றங்களினால் பல்வேறானவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான வழக்குகளின் பிரதிவாதிகளானகல்விஅதிகாரிகள் வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காககல்விஅமைச்சினால் தெரிவுசெய்யப்பட்டமையைசங்கம் வண்மையாககண்டிக்கின்றது. 

கல்விமேற்பார்வையைவிடஅடிப்படைஉரிமைவழக்குகளில் கூடியநேரத்தினைகிழக்குமாகாணகல்விஅதிகாரிகள் செலவிடுவதாகவும் இதற்கானகொடுப்பனவுகளைபெற்றுக் கொள்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளைநடைபெறும் வலய,மாகாணமட்டபரீட்சைகள் யாவும் தேசியமட்டபரீட்சையின் பண்புசார் தரத்துக்குமுரணாககாணப்படுவதைபலமுறைஊடகங்களின் ஊடாகவும் பொறுப்புவாய்ந்தஅதிகாரிகளுக்கும் தெரிவித்து இருந்தும் விசாரணைகளின் அறிக்கைகள் சங்கத்துக்குதெரியப்படுத்தவில்லைஎனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்புகல்விவலயத்தில் 2016ம் ஆண்டுநடைபெற்றக.பொ.த (சாஃத) பரீட்சையில் 44மாணவர்கள் சகலபாடங்களிலும்சித்தியடையவில்லைஎனவும் இதில் பெரும்பாலானபாடசாலைகள் நகரப்புறபாடசாலைகளாககாணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கணிதம்,விஞ்ஞானம்,தமிழ்,ஆங்கிலம் போன்றமுக்கியபாடங்களின் பெறுபேறுகள் வீழ்ச்சிஅடைந்து இருப்பதோடுக.பொ.த (உஃத)ரம் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கைகணிசமானஅளவுகுறைவடைந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

13வது அரசியல் சீர்திருத்தத்தில் மாகாணநிருவாகத்திற்குஉட்படுத்தப்பட்டகல்விஅமைச்சின் அதிகாரத்துக்குஉட்பட்டமாகாணக் கல்வித் திணைக்களம்,வலயங்களில் நடைபெறும் சட்டத்துக்குமுரணானஅதிபர்,ஆசிரியர் இடமாற்றங்கள் சட்டவிதிகளுக்குமுரணானவிசாரணைகள்,பழிவாங்கல்கள்,அதிகார துஸ்பிரயோகங்கள்,சேவைப் பிரமாணக் குறிப்புக்குமுரணானநியமனங்கள்,அரசியல் தலையீடுகள் மாகாணக் கல்வியில் பெரும் தாக்கத்தைஏற்படுத்திஉள்ளதாககுற்றஞ்சாட்டிஉள்ளார். 

கிழக்குமாகாணக் கல்விஅமைச்சுமற்றும் மாகாணத் திணைக்களம் 03 மாகாணக் கல்விப் பணிப்பாளர்களால் நிர்வகிக்கப்பட்டும் வினைத்திறனற்றநிர்வாகச் செயற்பாடுகளினால் பெரும்பாலானநிதி,மனிதவளங்கள் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதைசங்கம் வண்மையாகக் கண்டிப்பதாகபொன்னுத்துரைஉதயரூபன் அறிக்கையில் தெரிவித்து இருப்பதோடுஊடகங்களுக்குமுன்னிலையில் மாகாணக் கல்விஅமைச்சர் பகிரங்கவிவாதத்திற்குமுன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.