கல்முனையில் மாணவியின் தந்தையிடம் செருப்படி வாங்கிய நபர் தப்பியோட்டம்

இன்று (06) காலை 6.30 மணியளவில் ரியூசன் வகுப்புச் சென்ற மாணவியிடம் சேட்டை விட்ட நபர் ஒருவர் அவரது தந்தையால் செருப்படி வாங்கிய சம்பவம் கல்முனை- பாண்டிருப்பு எல்லை வீதியில் நடைபெற்றுள்ளது.
கல்முனைப் பிரதேசத்தில் சமீப காலமாக பாடசாலை, பிரத்தியோக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் பின்னால் செல்லும் நபர்கள் பாலியல் சேட்டைகள் புரிந்துவருகின்றனர். இது தொடர்பில் பெற்றோர்களும் முறையிட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று சனிக்கிழமை காலை ரியுசன் வகுப்புக்குச் செல்வதற்காக சென்ற தரம் 10 இல் கல்வி பயிலும் பாண்டிருப்பு மாணவி ஒருவரை பின்தொடர்ந்த ஒருவர் அவரை சேட்டைவிட எத்தனித்துள்ளார். குறித்த மாணவிக்குப்பின்னால் அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்த அவரது தந்தை தனது மகளிடம் சேட்டை விட முயன்ற நபரைப்பிடித்து செருப்பால் அடித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத இளைஞன் கல்முனை ஐய்யனார் கோவில் பக்கமாக தப்பியோடியுள்ளார்.