பிரபாகரனுக்கு ஒரு விளக்கையும், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மற்றுமொரு விளக்கையும் ஏற்றும் புலம்பெயர்ந்த தமிழ் குழுக்கள்.

உலகில் பல்வேறு பகுதிகளில் பிரிந்து காணப்படும் அடிப்படைவாத தமிழ் குழுக்கள் உயிரைக் கொடுத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தலைவர்களைப் பாதுகாத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்கள் பிரபாகரனுக்கு ஒரு விளக்கையும், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மற்றுமொரு விளக்கையும் ஏற்றுவதாகத் தமக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இராஜதந்திர சிறப்புரிமைச் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரை புலம்பெயர்ந்து வாழ் அடிப்படைவாத தமிழ் குழுக்கள் காப்பாற்றி வருவதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.

உண்மையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வரலாற்றில் முதன் தடவையாக வடக்கிலுள்ள தமிழ் மக்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவராகக் காணப்படுகின்ற சிங்கள ஜனாதிபதியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற தேவை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும், உலகில் பல பகுதிகளில் எஞ்சியுள்ள எல்.ரி.ரியினருக்குமே உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Thinakaran