இராணுவத்தின் பிடியில் விவசாய நிலங்கள் பொருளாதாரத்தை இழந்துள்ள கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 66 ஆவது நாளை எட்டியுள்ளது.

41 மீனவக்குடும்பங்களும் 97விவசாயக்குடும்பங்களும் தமது சொந்த நிலத்திற்காக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

தமது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்துள்ள மக்கள் ஏழு வருடங்களாக பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மக்களின் தொடர்போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.எனினும் இதுவரை எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது தொழில் வாய்ப்புக்களை இழந்த மக்கள் தொழிலாளர் தினத்தில் ஒப்பாரி போராட்டத்தை மேற்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது