சைட்டத்துக்கு எதிராக கிழக்கு பல்கலைகழகத்தில் ஆர்ப்பாட்டம்.

மலாபே சைட்டம் தனியார் பல்கலைகழகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு பல்கலைகழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று  வெள்ளிக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

“பொய் தீர்வு வேண்டாம், மலாபே சைட்டம் பொய் திருட்டு பட்டத்தை உனே இரத்துச் செய், சுதந்திரமான மருத்துவ நலனில் தலையிட வேண்டாம், சுதந்திரமான மருத்துவக் கல்வியை விற்கும் ராஜித, எஸ்.வி கிரியெல்லகெ செயற்பாடுகளை எதிர்ப்போம்.” போன்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பல்கலைகழக பிரதான வாயிற்கதவு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் கிழக்கு பல்கலைகழகத்தில் கற்கும் பெரும்பான்மை சிங்கள மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.