துறைநீலாவணை மக்களால் செல்லத்துரை ஐயா என்று அழைக்கப்பட்ட கதிரேசன்-செல்லத்துரை.

துறைநீலாவணை கிராமத்தின் கல்வித்தாரகையும்,மூத்த இலக்கியவாதியும்,துறைநீலாவணை கிராமத்தின் கல்வி மறுமலர்ச்சியாளரும்,மூத்த கவிஞருமான துறையூர் கதிரேசன்-செல்லத்துரை 4.5.2017 அதிகாலை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இயற்கை எய்தினார்.

சுமார் மூன்று நாட்கள் நோயினால் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறைபதமடைந்தார்.
ஆசிரியராக, அதிபராக,இருந்து துறைநீலாவணையில் கல்வியை ஆணித்தரமாக விதைத்து,விஞ்ஞானிகளையும், பொறியியலாளர்களையும்,வைத்தியர்களையும்,தொழிநுட்பவியலாளர்களையும்,அதிபர்களையும்,ஆசிரியர்களையும்,கவிஞர்களையும்,ஊடகவியலாளர்களையும், உருவாக்கிய பெருமை இவருக்கும்,இவரது குடும்பத்தாருக்கும் பெரும் பங்குண்டு.
1933ஆம் ஆண்டு ஐப்பசி இருபதில் துறைநீலாவணை மண்ணில் அவதரித்தார்.1954 ஆண்டு சேனைக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையேற்று அங்கு பயிற்றப்பட்ட ஆசிரியராக வாண்மையடைந்தார்.
அதன் பின்பு கண்டியில் 1957 தொடக்கம் 1961 வரையும் காத்திரமான கல்வியை ஊட்டினார்.அங்கிருந்து விடைபெற்று மீண்டும் தாயக மண்ணுக்கு கல்விப்பசியை வழங்குவதற்கு துறைநீலாவணைக்கு இறைவனால் அனுப்பிவைக்கப்பட்டார்.
பாற்சரம் எனும் கவிதை நூலினையும்,காலச்சுவடு என்னும் நூலினையும் எழுதி கற்ற கல்விக்கு கல்வியயாளர் எனும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார்.
துறைநீலாவணை மக்களால் செல்லத்துரை ஐயா என்று அழைக்கப்பட்ட இவர் துறைநீலாவணை மக்களுக்கு தனது விண்ணுலக பயணத்தை யாரிடமும் சொல்லாமல் சென்றுள்ளதால் துறைநீலாணை கிராமம் ஈன்றெடுத்த புதல்வர்கள் சோகத்துடன் கண்ணீரை கொட்டிக்குவிக்கின்றார்கள்.