சிறிய மற்றும் நடுத்தர தொழிற் துறையினருக்கான தகைமை மேம்படுத்தும் கருத்தரங்கு

சிறிய மற்றும் நடுத்தர தொழிற் துறையினருக்கான தகைமை மேம்படுத்தும் வெற்றிக்கான பின்புலம் திட்டத்தின் கீழ் மத்திய வங்கியின் வழிகாட்டலில் செலான் வங்கி தலைமையகத்தினால் கிழக்குப்பிராந்தியத்திலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான கருத்தரங்கொன்று புதன்கிழமை (03) நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் செலான் வங்கியின் பிராந்திய முகாமையாளர் சிவஞானி முத்ததிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி விரிவுரையாளர் எம். சோமசூரியம் வளவாளராகக்கலந்துகொண்டார்.

அத்துடன், செலான் வங்கியின் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை அபிவிருத்திப்பிரிவு வியாபார மேம்படுத்தல் அதிகாரி, மட்டக்களப்புக்கிளையின் உதவி முகாமையாளர் யோசப் ஜயமேனன் ஆகியோரும் பங்கு கொண்டனர்.

சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கான சகாய வட்டி கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்ற செலான் வங்கியின் இன்றைய கருத்தரங்கில் தொழில் வாய்ப்புக்களை அடையாளம் காணல், வியாபாரத்தினை சிறப்பாக முகாமை செய்தல், கணக்குப்பதிவும் அதன் நன்மைகளும், நிதித்தகவல்கள் தொடர்பான வழிகாட்டல், வரி செலுத்துகை நடைமுறைகளும் கணிப்பீடுகளும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

தேவையான கணக்கு வைப்பு நடைமுறைகள் இல்லாமை காரணமாக தங்களது நிலை தொடர்பில் அறிந்து கொள்ள முடியாதவர்களாக தொழிற் துறையினர் காணப்படுகின்ற சூழல்கள் உள்ளன இவ்வாறான விடயங்கள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.

இக்கரத்தரங்கில் செலான் வங்கியின் மட்டக்களப்பு, செங்கலடி, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை கிளைகளின் வாடிக்கையாளர்களான சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை முயற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.