விழித்து கொள்வோம் செயல்படுவோம் இல்லையேல் ஆர்ப்பாட்டமும் செய்திகளுமே மிஞ்சும்

வாழைச்சேனையில் பிள்ளையார் கோயில் காணி சட்டத்துக்கு புறம்பான விதத்தில் விற்பனையும் கொள்வனவும் கட்டட நிர்மாணமும் நடைபெறுவதாக ஆர்ப்பாட்டம் ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது.
அது கோயில் காணியோ அல்லது ஒருவருடைய சொந்த காணியாக இருந்தாலும் சட்டத்துக்கு புறம்பாக மோசடி செய்து விற்பனை செய்வதோ அபகரிப்பதோ தண்டிக்கப்படவேண்டிய விடையம் அதை அனுமதிக்கவும் முடியாது
ஆனால்,
இந்த விடையத்தை நாம் உற்றுநோக்கினால் சில விடையங்களை நாம் கற்றுக்கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் இதேபோல நிறைய நிகழ்வுகளுக்கு ஆர்ப்பாட்டம் மட்டுமே செய்ய முடியுமான அளவுக்கே தள்ளப்படுவோம்.

இந்த வாழைச்சேனை கைலாயபிள்ளையார் மாரியம்மன் கோயில் வரலாறானது மட்டக்களப்பு வரலாறு மட்டக்களப்பு மான்மியம் என்பவற்றில் இடம்பிடித்த வரலாற்று கோயிலாகும் இப்படியான கோயிலுக்கு சொந்தமான காணி ஒன்று பிரதான வீதியில் இருந்ததெனில் அதன் பெறுமதியோ இப்போ கோடிக்கணக்கில் வரும் ஆக இந்த கோடிக்கணக்கான பெறுமதி உள்ள இந்த முக்கிய இடத்தில் இருந்த இந்த நிலத்தை வைத்து இந்த கோயில் இதுவரை என்ன செய்தது
-கடை தொகுதி ஒன்றை அமைத்து வாடகைக்கு கொடுத்திருக்கலாம்
-இப்போ சுற்றுலா துறை கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ள பிரதேசமாக உள்ளதால் அங்கு ஒரு தரமான சைவ உணவகத்திற்கு ஒரு நல்ல கேள்வி உள்ளது அதையாவது செய்திருக்கலாம்
-இல்லை நில வாடகை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வியாபார தளம் அமைக்க கொடுத்திருக்கலாம்
-அல்லது கட்டடம் அமைத்து தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு கொடுத்திருக்கலாம்
-இல்லை தோட்டமாவது செய்திருக்கலாம்

அவ்வாறு செய்திருந்தால் இன்று இந்த நிலைமை இல்லை

ஆக இவ்வளவு காலமும் அந்த பெறுமதிமிக்க முக்கிய இடத்தில் இருந்த காணியால் எதுவிதமான பிரயோசனமும் இல்லாமலே இருந்துள்ளது கோயில் நிர்வாகத்தால் இது முடியாத காரியம் இல்லை
இப்போது கடை அமைக்கும் முஸ்லிம் வியாபாரி அதை 2016 யிலேயே வாங்கியுள்ளார்

இப்படித்தான் நமது எல்லா வளங்களும் பறிபோகின்றன நம்மிடம் பல வளங்கள் உள்ளன ஆனால் நாம் ஒன்றையும் பயன்படுத்தாமல் அநேகமாக அரச தொழிலையும் அல்லது வேறு மாதாந்த வருமானம் வரும் தொழில்களை அல்லது வெளிநாடு செல்வதிலுமே தீவிரமாக உள்ளோமே தவிர வளங்களை பாவித்து உழைப்பதுக்கோ நம்மவர்களுக்கு தொழில் வழங்குவதிலோம் நாட்டம் காட்டுவதை விட்டுவிடுகிறோம்.

எல்லை கிராமங்களில் உழைப்பதுக்குரிய வளங்கள் உள்ளன ஆனால் நாம் என்ன செய்கிறோம் ஏதாவது நிறுவனங்கள் உதவி புரியும்வரை அங்கு தொழில்செய்கிறோம் நிறுவனம் போனதும் இன்னொரு நிறுவனத்தின் உதவிக்காக ஏங்கி நிக்கிறோம் கடைசியில் எல்லா எல்லை கிராம மக்களும் நகரை நோக்கி வந்து குடியேறுகிறோம்
நம் அரசியல்வாதிகளும் எல்லை கிராமங்களை அபிவிருத்தி செய்வதில்லை அவ்வாறு எல்லை கிராமங்களை அபிவிருத்தி செய்து மக்கள் வாழ்வாதாரத்தை எல்லையில் உறுதிப்படுத்தினால் ஏன் மற்றவன் வந்து குடியேறுகிறான்
நாம் நம் வளங்களை பாவிக்காதவரை நம் வளங்களை இனம் காணாதவரை வளங்கள் உள்ள இடங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்காதவரை
வளங்களை தேடி திரிபவர்கள் கண்களில் அல்லது தமது சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுக்கும் நோக்கில் இயங்கும் அரசியல்வாதிகளின் கண்களில் இருந்து நம் பிரதேசமும் பிரதேச வளங்களும் தப்புவது கடினம்.

வருமானம் வரும் ஆலையங்களாவது தமது காணிகளில் உரிய திட்டங்களை வகுத்து நம் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வருமானம் ஈட்டும் வழிமுறைகளை செய்யுங்கள்.

அரச அதிகாரிகள் அரசியல்வாதிகள் எல்லை கிராம குளங்களை புனரமைத்து சீரான கால்வாய்களை அமைத்து கால்நடை வளர்ப்பு சேனை பயிர்ச்செய்கை விவசாயம் என்பவற்றை மக்கள் செய்வதற்குரிய திட்டங்களை வகுத்து மக்களுக்கு உதவுங்கள் இதன்மூலம் எல்லை கிராமங்களை வலுப்படுத்துங்கள் ஒருவனும் வந்து குடியேற மாட்டான்.

வளங்களை நாம் பாவிக்காவிடில் வளங்களை பாவிக்கும் நபர்கள் வருவார்கள் பயன்படுத்துவார்கள்
கடவுளும் முயற்சி உள்ளவனுக்கே துணையாக இருப்பார் நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டு வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் எனவே அரசும் வளங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுபவனுக்கே ஆதரவும் வழங்கும்.

நாம் விழித்துக்கொள்ளவேண்டிய காலம் விரைவாக செயல்பட வேண்டிய காலம்.
விழித்து கொள்வோம் செயல்படுவோம் இல்லையேல் ஆர்ப்பாட்டமும் செய்திகளுமே மிஞ்சும்.

Ladchumiharan Yoganathan