செல்வி சற்சொரூபவதி நாதன் காலமானார்.

ஒலிபரப்புத் துறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றி நேயர்கள் மத்தியில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துக்கொண்ட செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் இன்று காலமானார்.
வானொலித் துறையில் அறிவிப்பாளராக,நிகழ்ச்சித் தயாரிப்பாளராக,தொகுப்பாளராக,
செய்தி வாசிப்பாளராக,ஆங்கில ஒலிபரப்பில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக செயற்பட்டுள்ள இவர் தமிழ்மொழியில் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கினார்..

1990 களில் யாழ்ப்பாணத்தில் இருந்த சமயத்தில் மின்சாரம் இல்லாத வேளையிலும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வானொலி செய்திகளை கட்டாயம் கேட்க வேண்டிய சூழ்நிலை.அந்தவேளையில் இலங்கை வானொலியில் செய்தி வாசிப்பில் அதிகம் கேட்ட குரல்களில் இவருடைய குரலும் ஒன்று.செய்தி வாசிப்பில் இவர் தனிரகமாக விளங்கினார்.

ஒலிபரப்புத் துறையில் இவர் ஆற்றிய சேவைகளுக்காக பல விருதுகள் இவரைத்தேடி வந்தன.அண்மையில் வானொலி அரச விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது இலங்கை அரசு.வானலைகளில் வலம் வந்து சொல்லாட்சி நடத்திய இன்னுமொரு வானொலிக் குயில் இன்று மௌனித்தது.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.