5 வருட பயணம் – நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை நோக்கி மட்டக்களப்பு மாவட்டம் 

Batticaloa Developments (1)இயற்கையின் அழகும் அத்தனை இயற்கை வளங்களும் ஒருங்கே பொருந்திய மட்டக்களப்பு மாவட்டம் அண்மைக் காலங்களில் வறுமையின் கணக்கெடுப்பில் மிகவும் பின்தங்கியதாக இருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியதே. இவ்வாறான  நிலையிலிருந்து மாவட்டத்தை எவ்வாறு மீட்டெடுப்பது, முன்னேற்றுவது என்பது மாவட்டத்தின் மேம்பாடு சார்ந்து ;கின்ற ஒவ்வொருவருடைய சிந்தனையாக இருக்கிறது.
இலங்கையின் தேசிய உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட அளவுகளில் பங்களிப்புச் செய்துவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு என இன்னோரன்ன தொழில் துறைகளிலும் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
யுத்த காலத்திலும் சரி இயற்கை அனர்த்தங்களிலும் சரி அழிவுக்குக் குறைவிருக்கவில்லை. தோடர்ச்சியாக இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்த மக்க நிறைந்து வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்வேறு வேலைத்திட்டங்களையும் அபிவிருத்தித்திட்டங்களையும் முன்னெடுத்த வண்ணமேயுள்ளன. இருந்தாலும் மாவட்டத்தின் வளர்ச்சி நிலை ஒரு குறிப்பிட்டளவுக்கு மேம்பட்டதாகக்காணப்படவில்லை.
இருந்தாலும் மாவட்ட அரசாங்க அதிபராக திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் 2012ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை அவரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயவேண்டிய தேவை முக்கியமாக இருக்கிறது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 முதல் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட         அபிவிருத்தி திட்டங்கள் குறித்த பார்வை மிக முக்கியமானதொரு தேவையாக இருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் விவசாயம் முதன்மையானதொரு துறையாகும். முக்கியமாக இயற்கை அனர்த்த பாதிப்புக்கான நட்டஈடாக ரூபா 143 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. ரூபா 160 மில்லியன் செலவில் 8 புதிய களஞ்சிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாய பயிற்சி நிலையம் கரடியனாற்றில் ரூபா 80 மில்லியன் அமைக்கப்பட்டு  வருகின்றது.  30கிலோமீற்றர் விவசாய பிரதேசங்களுக்கான பாதைகள் புனரமைக்கப்பட்டுள்ளது.
விவசாய உற்பத்தி குழுக்கள்  உருவாக்கப்பட்டு EAS உடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் வந்தாறுமூலையில் விதை நெல் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கிவருகின்றது. விவசாயிகளின் நன்மை கருதி மாவட்ட விவசாய அலுவலகம் ரூபா 12 மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும் மேலும் யானைகளினால் விவசாய செய்கை பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் வாகரையில் 50.7 கி.மீ. யானை வேலியும் செங்கலடி பகுதியில் 56 கி.மீ. வேலியும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 5 வருடங்களில் விவசாய துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் மூலம்  தேசிய நெல் உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பங்களிப்பு 10 முதல் 12வீதம்  அதிகரித்துள்ளது.
Batticaloa Developments (6)
கால்நடை வளர்ப்பு அபிவிருத்திக்காக பால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நல்லின மாடுகள் வளர்ப்புக்கென ரூபா 200 மில்லியன் தலா 1 குடும்பத்திற்கு ருபா 1 இலட்சம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தேசிய பால் உற்பத்தியில் எமது மாவட்டத்தின் பங்களிப்பு 20 – 25வீதம்  அதிகரித்துள்ளது.
மீன்பிடி துறையில், ரூபா 40 மில்லியன் செலவில் நாவலடியில்  மீனவ பயிற்சி பாடசாலை, ரூபா 125 மில்லியன் புதுக்குடியிருப்பு மீன் குஞ்சு உற்பத்தி நிலையம், மற்றும் வாவி பாதுகாப்புக்கென எல்லையிடல் வேலைகளுக்கென ரூபா 33 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாவியை ஆழமாக்கும் வேலைத்திட்டங்களுக்கான திட்ட முன்மொழிவுகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய மீன் உற்பத்தியில் மட்டக்களப்பபு மாவட்ட பங்களிப்பு 6 தொடக்கம் 8வீதமாக அதிகரித்துள்ளது.
நீர்ப்பாசன அபிவிருத்தியின் கீழ் ரூபா 1100 மில்லியன் பெறுமதியான 63 பாரிய செயல்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 50 சிறிய, நடுத்தர குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் கித்துள், றூகம் ஆகிய இரு பாரிய குளங்கள் புனரமைப்புக்காக ரூபா 9742 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலதிகமாக 17,552 ஏக்கர் விவசாயம் செய்ய முடியும். அத்துடன் ரூபா 2 இலட்சம் மக்களுக்கு குடிநீர் வசதி வழங்க முடியும். இந்த இணைப்பு மூலம் வருடம் தோறும் வீணாகும் 370,000 ஏக்கர் கன அடி நீரை சேமிக்க முடியும். மேலும் 1,170ஆ நீளமான நீர்ப்பாசன வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ரூபா 48 மில்லியன் செலவில் இரச்சகல் குளம் மற்றும் ரூபா 30 மில்லியன் செலவில் அம்மனடி அணைக்கட்டு, ரூபா 24 மில்லியன் செலவில் புலுட்டுமானோடை குளம் என்பன புனரமைக்கப்பட்டு இப்பகுதி விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெல் உற்பத்தி நிலம் 30வீதத்தால்  அதிகரித்துள்ளதுடன், நன்னீர் மீன் உற்பத்தியும் கணிசமானளவு அதிகரித்துள்ளதுடன் வெள்ளப்பாதிப்பும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
Batticaloa Developments (2)
மாவட்டத்தின் கல்வி தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 31 பாடசாலைகளுக்கான பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 32 முன்பள்ளிகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூபா 38 மில்லியன் செலவில் 20 விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன் வெபர் விளையாட்டு மைதானத்தின் மிகுதி வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூபா 95 மில்லியன் செலவில் வேலையின்மையை குறைக்கும் நோக்கில் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் இடைவிலகல் குறைவடைந்துள்ளதுடன் இதன் மூலம் மாணவர் ஆசிரியர் விகிதம் 1:20 என குறைவடைந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் வளர்ச்சியடைந்துள்ளது. அதே நேரம் மேலும் 12 மகிந்தோதய பாடசாலை கணணிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வீடமைப்பு திட்டங்களைப் பொறுத்தவரை இதுவரை 6,143 புதிய வீடுகள் கடந்த 4 வருடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வறிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 4,605, விதவைகள் 1073, வலது குறைந்தோர் 124, முன்னால் போராளிகள் 296, காணாமல் போன குடும்பங்கள் 45உம் அடங்கும். அது தவிர 12,000 வீடுகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் நிரந்தர வீடுகளை உடைய குடும்ப எண்ணிக்கை 60 – 70வீதமாக  அதிகரித்துள்ளது.
உல்லாச பிரயாண துறையை பொறுத்தவரை கல்லடி கடற்கரை ரூபா 50 மில்லியன் செலவிலும், மட்டக்களப்பு கோட்டை ரூபா 33 மில்லியன் செலவிலும் அழகுபடுத்தப்பட்டுள்ளது. உல்லாச பிரயாணிகளுக்கான தகவல் மையம், உள்ள+ர் உற்பத்தி நிலையங்கள், ரூபா 10 மில்லியன் செலவில் கல்லடி பால சிறுவர் விளையாட்டு நிலையம்,  ரூபா 17 மில்லியன் செலவில் விற்பனை நிலைய தொகுதி, சல்லித்தீவு அழகுபடுத்தல் ரூபா 25 மில்லியன் மற்றும் காந்திப்பூங்கா, லீனியர் பூங்கா, கோட்டைப் பூங்கா, ரூபா 200 மில்லியன் செலவிலான மாநகர சபைப்பிரதேச வீதிகளுக்கான காபற் இடல் மூலம் 37கிலோமீற்றர் மாநகர வீதிகள் காபற் இடப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ள+ர், வெளியூர் உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சுகாதார வசதிகள் மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட வைத்தியசாலைகளில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு ரூபா 275 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்  ரூபா 240 மில்லியன் செலவில் களுவாஞ்சிகுடி  வைத்தியசாலை அபிவிருத்தி செய்யப்பட்டு ஜனாதிபதியால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதே வேளை குப்பைகளை அகற்றி உரிய முறையில் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு ரூபா 407 மில்லியன் ரூபா செலவில் கழிவகற்றல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 உள்ளுராட்சி சபைகளும் நன்மை பெற்றுள்ளன. மேலும் 37 கிளினிக் நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் 5 வைத்தியசாலைகள் (கிராமிய) புனரமைக்கப்பட்டு அவற்றுக்கான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார துறை மேம்படுத்தப்பட்டதினால் சிறு வயது திருமணம் 9வீதத்திலிருந்து -7வீதமாகக் குறைந்துள்ளது. சிசு மரண விகிதம் 17.6வீதத்திலிருந்து – 11.28வீதமானவும் நிறை குறைவான பிள்ளைகள் 11.28 – 9வீதவும் வீட்டில் பிறக்கும் குழந்தைகள் 10வீதத்திலிருந்து – 0 ஆகவும் குறைவடைந்துள்ளது.
Batticaloa Developments (5)
வீதிக் கட்டமைப்பை பொறுத்தவரையில் ரூபா 320 மில்லியன் செலவில் கோட்டை முனைப்பாலம் புனரமைக்கப்பட்டுவருகின்றது. இதேவேளை ரூபா 320 மில்லியன் செலவில் அம்பிலாந்துறை வீரமுனை வீதி, லேடி மன்னிங் றைவ், செங்கலடி பதுளை வீதி ரூபா 3140 மில்லியன் செலவிலும் புனரமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் ரூபா 200 மில்லியனில் 37கிலோமீற்றர் மாநகர சபை வீதி காபெற் இடப்பட்டுள்ளது. கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 561கி.மீ வீதி கொங்கிறீட் இடப்பட்டுள்ளது. 101கிலோ மீற்றர் வீதி கிரவல் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளது. 100கி.மீ வீதி தார் வீதிகளாக மாற்றப்பட்டுள்ளது. 20கி.மீ வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன் சந்தை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து செய்யும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளதுடன் 52 கிராமிய பாலங்கள் அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக சேவையை மக்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் ரூபா 804 மில்லியன் செலவில் மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடம் திராய்மடுவில் அமைக்கப்பட்டு வருகின்றது. 2012ஆம் ஆண்டு 2451 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டு அவர்கள் தம் கடமையை  இலகுவாக செய்யும் பொருட்டு மோட்டார் சைக்கிள்கள் வழங்;கப்பட்டுள்ளது. மேலும் ரூபா 337 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 10 பிரதேச செயலகங்கட்கு மேலதிக கட்டிட வசதிகள் மற்றும் வதிவிட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.  இது தவிர ஜீ.ஐ.ஏஸ். தோழில்நுட்பம் (GIS System) மற்றும் பொதுமக்கள் பட்டயம் என்பன கணணி மய வசதி செய்யப்பட்டுள்ளதுடன் 200 இளைஞர் யுவதிகட்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டு கிராமங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
மீள்குடியேற்றப்பகுதிகளில் விசேடமாக மீள்குடியேற்றப்பட்ட 36149 குடும்பங்கட்கு 6143 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 1858 மலசல கூடங்கள் 1082 குடிநீர் வசதிகள், 200கி.மீ. கிராமிய வீதிகள், பாடசாலைகள் – 15, சுகாதார நிலையங்கள், வாழ்வாதார அபிவிருத்தி உதவிகள் 2700 குடும்பங்கட்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 20.3வீதத்தில்  இருந்த வறுமை 19.4 வீதமாக ஆக குறைவடைந்துள்ளது. மீள்குடியேற்றப் பகுதிகளுக்கான விசேட 3 வருட திட்டம் (2017 – 2019) ஒன்று விசேடமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வாகரை, கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக துறைசார் திட்டம் ரூபா 50,530 மில்லியன் பெறுமதியான திட்டங்களை கொண்டதாக தயாரிக்கப்பட்டு, மீள்குடியேற்ற அமைச்சிடம்; கையளிக்கப்பட்டுள்ளது.
உன்னிச்சை குடிநீர் திட்டத்தின் கீழ் 58000 புதிய குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் உதவியுடன் 193 குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளதுடன் 2014 மலசல கூட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட மக்களில் 6வீதமாக இருந்த குடிநீர் வசதி 32வீதமாக  தற்போது அதிகரித்துள்ளது. அத்துடன் நீரால் தொற்றும் நோய்களும் குறைவடைந்துள்ளமையை காணலாம்.
சமுக அபிவிருத்தி திட்டங்கள் த்திட்டங்களின் கீழ் இதுவரை 87 கிராமிய விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டதன் மூலம் இளைஞர் யுவதிகள் விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரித்தமையால் 26 gold medal (மாகாண மட்டம்) 2 gold medal (National) 4 Silver medal (National) 12 Brown medal (National)   மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதேவேளை கடந்தகால வன்செயல்களால் பாதிக்கப்பட்ட 101 வழிபாட்டு தலங்கள் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Batticaloa Developments (3)
இதே வேளை துறைசார் நிபுணர்களின் ஆலோசனையுடன் (2017 – 2021)  5 வருடதிட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 மிக முக்கிய துறைகள் இனங் காணப்பட்டு ரூபா 80,796 மில்லியன் பெறுமதியான திட்டங்கள் தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. புதிய முதலீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் உள்வாங்கும் வகையில் மாவட்ட காணிப்பயன்பாட்டு பிரிவினால் 5776 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் முன்னெடுக்கும் வகையில் அபிவிருத்தி திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளன. ஆவற்றில் நகர அபிவிருத்தி திட்டங்கள் 2030ற்கான திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டு தேசிய திட்டமிடல் திணைக்களத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. 1450மில்லியனில் தாளங்குடாவில் அமைக்கப்பட்டுவரும் பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை மூலம் 5000 தொழில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.
மந்த போசாக்கான 16,981 குடும்பங்கள் இனம் காணப்பட்டு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், ரூபா 300 மில்லியனில் விசேட பொருளாதார மத்திய நிலையம், ரூபா 24,140.60 மில்லியனில் முந்தனை ஆற்றுப் படுக்கை அபிவிருத்தி, ரூபா 1050 மில்லியனில் மட்டக்களப்பு வாவியின் குருக்கள் மடம் அம்பிலாந்துறைக்கு இடையிலான இணைப்புப் பாலம், ரூபா 1250 மில்லியன் திட்டமிடலில்
மட்டக்களப்பு வாவியின் குருமன்வெளி மண்டூர் இடையிலான இணைப்புப் பாலம், ரூபா 1553 மில்லியனில் தொப்பிக்கல – கிரான் பாலம் நிர்மாணிப்பு,  ரூபா 560 மில்லியன் செலவில் காலநிலை மாற்றத்திற்கான விவசாய திட்டம், ரூபா 722 மில்லியனில் கிராமிய வீதி மேம்பாட்டுத்திட்டம் – ரூபா 312 மில்லியன்pல் சிறிய நீர்ப்பாசனத்திட்டம் , ரூபா 473 மில்லியன் செலவில்  உல்லாச பிரயாண துறை மேம்பாடு, பாரம்பரிய உணவு உற்பத்தி நிலையங்கள் திறத்தல், குடும்ப ஆய்வு விபரம் கணணிமயப்படுத்தல் எனப் பப அபிவிருத்திகள் திட்டமிடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித்திட்டங்களும் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களும் மாவட்டத்தின் பௌதீக, பொருளாதார, கல்வி, சமூக மற்றும் மனித வலு சார்ந்தும் மேம்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பது எல்லோருடையதும் எதிர்பார்ப்பாகும்.
ஆனாலும் மக்களது மனோநிலையில் ஏற்படுகின்ற மாற்றமொன்றே எதிர்கால மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதில் மறுகருத்திருக்காது.
Batticaloa Developments (4)