ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடாத்தப்பட்டன..

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் நேற்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டது .

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின்  தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது .

வடகிழக்கு உட்பட நாட்டில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள்  மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

நல்லாட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஓரளவு சுதந்திரம் உள்ளபோதிலும் இதுவரையில் தாங்கள் முழுமையாக சுதந்திரமாக கடமையாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின்  தலைவர் வா.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.