புலம்பெயர் தமிழர்கள் இனப்பிரச்சனை தீர்வில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.வீ.ஆனந்தசங்கரி

29.12_sangari_aஇன்றைய புலம்பெயர் தமிழர்கள் இனப்பிரச்சனை தீர்வில் முக்கிய பங்கு வகிக்க முடியுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகிறது. ஏன அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்..
அறிக்கையின் முழுவடிவம்

பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கருத்தறிய தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கோணத்தில் உங்கள் அனைவரையும் அணுக விரும்புகிறது. எமது கட்சி இந்த நாட்டில் மிகவும் பிரபல்யமடைந்து, ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்த இரு பெரும் அரசியல் தலைவர்களின் உருவாக்கத்தில் இயங்குகிறது என்பதை அனைவரும் அறிவீர்கள்.
ஒன்றாக செயற்பட்டு பின்பு நீண்டகாலம் அதாவது 23 ஆண்டுகள் பிரிந்திருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சிகளின்  தலைவர்களாகவும் அரச சட்டத்தரணிகளாகவும் விளங்கிய கௌரவ.ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ.எஸ்.ஜே.வி.செல்வநாயகம்  ஆகியோர் தமது சுயநலத்தை கைவிட்டு தமிழ் மக்களின் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டுமென்ற ஒரே இலட்சியத்தோடு எதுவித பலாபலனையும் எதிர்பாராது தமக்குள்ளே இணைப்பை ஏற்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியபோது அதன் முக்கியத்தை உணர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற நம் இனத்தவர்கள் மிக்க ஆர்வத்துடனும் பெருமகிழ்ச்சியுடனும் இச் செய்தியை வரவேற்று எம் மக்கள் பல வகையிலும் பல்வேறுபட்ட கொண்டாட்டங்களை கொண்டாடினர்.
இவ்விரு தலைவர்களின் இணைவு வேறு எத்தகைய இணைப்புடனும் ஒப்பிட முடியாதென்பதை நம் மக்கள் நன்கு அறிந்திருந்தனர்.  அரசியல் காரணத்தால் பல ஆண்டுகாலம் பிரிந்திருந்த அண்ணன் தம்பி உறவுகளில்கூட பெரும்மாற்றம் ஏற்பட்டது. ஒரே வார்த்தையில் கூறுவதானால் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 1977ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் இதற்கு சான்று பகிரும். கட்சி பேதமின்றி தலைவர்கள் இணைவதும் பிரிவதும் சர்வ சாதாரணமான விடயமாகும். ஆனால் நமது தலைவர்கள் தம் இணைப்பால் தமக்குள் இனி பிரிவென்பது இல்லை என்று சரித்திரம் படைத்தனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெற்றமை சிலரின் சுயநல போக்காலே அன்றி தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுடைய ஆதரவுடன் அல்ல. அன்னாருடன் இறுதிவரை செயற்பட்ட நான் மிக உறுதியுடன்; கூறுகிறேன், தமிழ் மக்களின் ஒற்றுமையை விரும்பாத அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களின்; தலையீட்டால் அக்கட்சி மீள்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தந்தை செல்வா இறந்து 28 ஆண்டுகளின் பின்பு யாரோ சிலரின் தூண்டுதலால்  தமிழரசு கட்சி புத்துயிர் பெற்றமை திட்டமிட்ட ஓர் சதியாகும்.
இவ்விரு கட்சிகளின் இணைப்பு இரு தலைவர்களுக்கும் எதுவித இலாபமும் அற்றதாகையால்  இவர்களின் செயற்பாட்டை தமிழ் மக்கள் அவர்கள் செய்த பெரும் தியாகமாகவே ஏற்றுக்கொண்டனர். துரதிஷ்ஸ்டவசமாக அவர்கள் ஒவ்வொருவராக அமரத்துமடைந்த பின் அவர்களின் இடங்கள் தொடர்ந்து பொருத்தமானவர்களால் நிரப்பப்பட்டே வந்துள்ளது. ஆனால் துரதிஸஷ்டவசமாக நாட்டில் எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கையாளப்பட்ட வழிமுறைகள் பலதரப்பட்டவை ஆகையால் மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலைமை தொடர்ந்து நீண்டகாலம் நிலவியது. திட்டமிட்டு எதையும் செய்ய முடியாத நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டோம்.
முப்பது ஆண்டுகளாக பல துன்பங்களை அனுபவித்த பின்பும்கூட எமது மக்கள் இப்போதும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். ஆனால், எம்மால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வை பற்றி எவரும் அக்கறை கொள்ளாதது எமது துரதிஸஷ்டமே. இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் கையிலும் “தமிழ் கட்சிகள் மூலை முடுக்குகளில் இருந்து ஒழித்து விளையாட முடியாது” என்ற தலைப்பில் பிரபல ஊடகவியலாளரும், எழுத்தாளருமான தர்மரட்ணம் சிவராம் என அழைக்கப்படுகின்ற தராக்கியால் எழுதப்பட்ட கட்டுரையின் பிரதி இருக்க வேண்டும்.
சுயநலத்துடன் செயற்படும் சில தலைவர்கள், இனப்பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு பொருந்துமாக இருக்கும் என்பதை கற்றறிந்து கொள்ளலாம். இன்றைய புலம்பெயர் தமிழர்கள் இனப்பிரச்சனை தீர்வில் முக்கிய பங்கு வகிக்க முடியுமென தமிழர் விடுதலைக் கூட்டணி கருதுகிறது.
ஆகவே அவர்கள் இலங்கை தமிழர்களின் அண்மைகால சரித்திரத்தை நன்கு கற்றறிந்துகொண்டு எத்தகைய பங்கு வகிக்கலாம் என்பதை தீர்மானிக்கலாம். தமிழர் விடுதலைக் கூட்டணியை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் விருப்பத்திற்கேற்பவே நடந்துள்ளதெனவும், இனப்பிரச்சினையை தீர்ப்பதாக இருப்பின் ஒரே அணியில் பொது வேலைத்திட்டத்தின் கீழ் இணைந்து செயற்படாவிட்டால் தீர்வு காண்பது கடினமானதாகும். ஏன அநöத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீ.ஆனந்தசங்கரி                                                            செயலாளர் நாயகம் – த.வி.கூ