மஹிந்த ராஜபக்ஷ எந்தவடிவத்தில் கூட்டங்களை நடாத்தினாலும் தேர்தல் ஒன்று வந்தால் தோல்வியையே சந்திப்பார்

sampikkaஎன ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்..

மஹிந்த ராஜபக்ஷ கடந்த தேர்தலுக்கு முன்னர் எத்தனை கூட்டங்களை நடாத்தினார் என்பதை அறிவீர்கள். இருப்பினும், தோல்வியையே சந்தித்தார். அடுத்த தேர்தலிலும் என்ன நடக்கப் போகின்றது என்பதையும் பொருத்திருந்து பார்ப்போம். இந்த நாட்டு மக்கள் சரியான தீர்மானத்தை எடுப்பார்கள்.

தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியினர் என்னதான் சொன்னாலும், அடுத்துவரும் செப்டம்பர் மாதம் ஆகும் போது மாகாண சபைத் தேர்தலை நடாத்தவுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்