காரைதீவு மதுபானசாலை உடைத்துச்சேதம்!

காரைதீவு நிருபர் சகா
காரைதீவு பிரதானவீதியிலிருக்கும் மதுபானசாலை இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டிருக்கிறது..
நேற்று திங்கள் நள்ளிரவு இதுச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனத்தெரியவருகின்றது.
சம்மாந்துறைப் பொலிசாரிடம் இது தொடர்பாக முறையிடப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
மதுபானசாலைக்கு முன்பாகவுள்ள வடிகானுக்குள் உடைக்கப்பட்ட பூட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றை பொலிசார் கைப்பற்றினர்.
மதுபானசாலைக்குப்பொறுப்பான ஒருவர் கூறுகையில் காலையில் கடையைத்திறக்கவந்தபோது முன்கதவு உடைக்கப்பட்டு திறந்தநிலையிலிருந்தது. நாம் சம்மாந்தறைப்பொலிசாரிடம் முறையிட்டள்ளோம். பணம் திருட்டுப்போக நியாயமில்லை. நாம் அப்படி இரவில் பணம்வைப்பதில்லை என்றார்.
அண்மைக்காலமாக இம்மதுபானசாலை அகற்றப்படவேண்டும் என பொதுநலஅமைப்புகள் போர்க்கொடி தூக்கிவந்தமையும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
உயர்நீதிமற் தீர்ப்பின்பிரகாரம் இம்மதுபானசாலை இவ்விடத்திலிருந்து வேறிடத்திற்கு மாற்றப்படலாமென கூறுவதாக அண்மையில் இடம்பெற்ற பிரதேசஅபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் மதுவரி இலாகாவினால்  தெரிவிக்கப்பட்டது.
unnamed (13) unnamed (12)