ஆசிரியர் உதவியாளர்களுக்கு அதிஸ்டம்

தோட்­டப் ­பா­ட­சா­லைகள் மற்றும் நாட்டில் வேறு பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவை பத்தாயிரம் ரூபா­ வரை அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக கல்வி அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

தோட்­டப்­பா­ட­சா­லைகள் மற்றும் நாட்டில் வேறு பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்டு வந்த 6ஆயிரம் ரூபா கொடுப்­ப­னவை 10ஆயிரம் ரூபா­வரை அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்­தினால்  கோரப்­பட்ட வேண்­டு­கோளின் பய­னா­கவே கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் ஆசி­ரியர் உத­வி­யா­ளர்­களின் கோரிக்கை மற்றும் நிலவும் வாழ்க்­கைச்­செ­லவை கருத்­திற்­கொண்டு கல்வி அமைச்ச­ரினால் அமைச்­ச­ர­வைக்கு முன்­வைத்த அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரத்­துக்கு அனு­மதி கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

அதன் பிர­காரம் இந்த கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 2017 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.