சுவிஸ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நிறைய மருத்துவத்தேவைகள் உண்டு.மூதாளர் ஆண்டுவிழாவில் கோபால்

சுவிஸ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு நிறைய மருத்துவத்தேவைகள் உண்டு என சுவிஸ் தமிழ் மருத்துவதுறை பணியாளர்களின் ஒன்றியத்தின் இணைப்பாளர் மருத்துவதாதியும்,போதனாசிரியருமான சந்தான கோபால் தெரிவித்தார்..
சூரிச் அருள்மிகு சிவன் கோயில் சைவத்தமிழ்சங்கத்தினால் நடாத்தப்படும் மூதாளர் அன்பு இல்லத்தின் ஓராண்டு நிறைவு விழா மூதாளர் இல்ல மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை(01.05) பிற்பகல் நடைபெற்றது.
மதிப்பிற்குரிய ரகுநாதகுருக்கள் அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரைiயினை ச.nஐயசீலன் நிகழ்த்தினார்.
நிகழ்வில் மூதாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மூதாளர் இல்லத்துக்கு சேவையாற்றும் சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
திரு சந்தான கோபால் தொடர்ந்து உரையாற்றுகையில் இங்கு வாழும் நமது மக்களுக்கு உள்ளம், மருத்துவம்,உளவியல் சார்ந்த பல பிரச்சினைகள் உண்டு இதனை சுவிஸ் மத்திய மாநில அரசுகள் பல ஆய்வுகள் ஊடாக அறிந்துள்ளனர். நமது மக்களின் பல்வேறு பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கு இவ்வாறான மூதாளர் இல்லங்கள் வழிவகுக்கும். இப்பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கு இவ்இல்லம் ஒரு ஆரம்பமாகும்.இதனை சிவன்கோயில் முன்னெடுத்துள்ளது ஒரு மகிழ்ச்சியான விடயமாகும்.
ஆலயங்கள் ஆன்மிகத்துடன் மட்டுமின்றி பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.அந்தவகையில் சிவன்கோயில் ஆன்மிகத்துடன்மட்டும் நின்றுவிடாமல் மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையினை மேம்படுத்த புலத்திலும் களத்திலும் பல் வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது இதுபாராட்டப்படவேண்டிய விடயமாகும்.
நாம்தற்போது வாழும் சுவிஸ் நாட்டில் நமது இனத்தைச்சேர்ந்த பல மருத்துவர்கள:,தாதிமார்கள் இருந்தும் அவர்களை நலவாழ்வு சார்ந்த பொதுப்பணிக்கு கொண்டுவருவது மிகவும் கடினமாகவே உள்ளது.
இந்நிலமைமாறவேண்டும் நலவாழ்வு சார்ந்து நமது மக்களுக்கு பல்வேறு சேவைகள் எம்மால் செய்ய வேண்டியுள்ளது.எனவே மருத்துதுறைசார்ந்த அனைவரும் பொது நோக்குடன் நலவாழ்வுத்துறையில் இணைந்து எம்முடன் பொதுப்பணியாற்ற முன்வரவேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில்  தாயகக்கலைஞன் கந்தப்பு nஐயந்தனின் பக்திப்பாடல்களும் இடம்பெற்றதுடன் பரா.இராதாகிருஸ்ணன்,ஆசிரியர் விவேகானந்தன்,யோகா பயிற்றுவிப்பாளர் லிங்கேஸ,;  மீரா உட்பட பலர்; உரையாற்றினர்.
சூரிச் அருள்மிகு சிவன் கோயில் சைவத்தமிழ்சங்கத்தினால் தாயகத்தில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று மாடிகளை கொண்ட 100அறைகளை உள்ளடக்கி மூதாளர் இல்லம் ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்படத்தக்கதாகும்.sivankovil-a sivankovil-b sivankovil-c sivankovil-d sivankovil-e sivankovil-f sivankovil-g sivankovil-h sivankovil-i sivankovil-j sivankovil-k sivankovil-k sivankovil-l sivankovil-n sivankovil-o sivankovil-p sivankovil-q sivankovil-r