கொக்கட்டிச்சோலை விடுதிக்கல் குப்பை மேட்டில் தீ – சிறிய வெடிச்சத்தங்களும் மக்கள் அச்சத்தில்.

kkc-a kkc-b kkc-c kkc-d kkc-e kkc-f

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள குப்பை மேட்டில் தீ ஏற்பட்டுள்ளமையினால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இன்று(01) மாலைவேளையிலிருந்து இக்குப்பைமேடு எரிந்து கொண்டிருப்பதாகவும், குறித்த குப்பைமேட்டில் இனந்தெரியா நபர்கள்; தீ இட்டிருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

குப்பை மேடு எரிந்து கொண்டிருக்கும் நிலையில் சிறிய, சிறிய வெடிச்சத்தங்களும் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், குறித்த பகுதியில் உள்ள வீதியின் ஊடாக போக்குவரத்து செய்ய முடியாதுள்ளதாகவும் அப்பிரதேசத்து மக்கள் கூறுகின்றனர். எல்லாவிதமான குப்பைகளும் குறித்த இடத்தில் கொட்டப்பட்டுள்ளமையினால், தீயினால் வெளிவரும் புகையினை சுவாசிக்க முடியாததுள்ளதாகவும் அம்மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இது தொடர்பில், பிரதேச சபை செயலாளரிடம் வினாவியபோது, குறித்த குப்பைமேடு எரிக்கப்பட்டமை தொடர்பில், 5.30மணிக்கு பிற்பாடே தமக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், இதனையடுத்து, தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட குப்பைகள், குறித்த இடத்திலே கொட்டப்பட்டு வருகின்றன. இக்குப்பைகளை தரம்பிரிக்காமல் கொட்டுவதினால் தொடர்ச்சியாக பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டுவருவதாகவும், பாதுகாப்பற்ற முள்கம்பி வேலியினால் குப்பைகள் பறந்து செல்கின்ற நிலையும் இடம்பெறுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்..

இது தொடர்பில் பிரதேச சபை செயலாளர் கூறுகையில், குறித்த குப்பைகளை தரம்பிரித்து, குப்பைகளை உக்க வைப்பதற்கான வேலைகள் செய்வதற்காக, அதற்கான கட்டிடமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அமுல்படுத்தவுள்ளதாகவும் பிரதேசசபை செயலாளர் கூறினார்.