கேப்பாபுலவில் தொழிலாளர் தினமான இன்று ஒப்பாரி போராட்டம்

keppapulavu-aaதொழிலாளர் தினமான இன்று கேப்பாபுலவு மக்கள் தமது தொழில் உரிமைகளை குறிப்பாக தமது தொழில் புரியும் நிலங்கள் கடல் ஆகியவற்றை  கோரி  ஒப்பாரி போராட்டமொன்றை மேற்கொண்டனர்

இன்று காலை  பத்துமுப்பது மணிக்கு முல்லைத்திவு பாதுகாப்பு படைக் கட்ளை தலைமையகம் முன்பாக போராட்டத்திலீடுபடும் இடத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இப்போராட்டத்துக்கு ஆதரவாக வடமாகான சபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் அவர்களும் மக்களுடன் கலந்துகொண்டிருந்தார் . 

கேப்பாபுலவு  மக்களின் போராட்டம் இன்று 62   வது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது கடந்த மாதம் 1 ம்   திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் பொதுமக்கள் தமது சொந்த காணிக்குள் கால் பதிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்தனர்

இந்நிலையில் இன்றைய  தினம் சர்வதேச  தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் உரிமைவேண்டி போராடும் நாளில் நாம் தொழில் புரியும் இடங்களை இழந்தநிலையில் வாழ்கின்றோம் எனவே எமது சொந்தக் காணிகளை வயல் நிலங்களை கடல்வளத்தை அபகரித்து இராணுவத்தினர் முகாமிட்டுள்ள நிலையில் எமது தொழில் வாய்ப்புக்களை இழந்து  இன்று ஏழரை வருடமாக கஸ்ரப்பட்ட்டு வருகின்ற எமக்கு என்ன தீர்வு வீதியில் 62 நாளாக போராடியும் தீரவில்லை என கோரி தொழில் உபகரணங்களை வீதியில் வைத்து கூடியிருந்து ஒப்பாரிவைத்து தமது வளங்களை கோரி போராட்டத்தை நடத்தியிருந்தனர்