யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இரட்ணம் விக்னேஷ்வரன்

யாழ்.பல்கலைகழக புதிய துணை வேந்தராக இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு பேராசிரியர் இரட்ணம் விக்னேஷ்வரன்  பதவியை பொறுப்பேற்றுள்ளார்..

அண்மையில் யாழ்.பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றிருந்தது. இதில் பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் சற்குணராசா மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தேர்தல் மூலம் பேராசிரியர் சற்குணராஜா முதலாவதாக தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பின் இருந்த விக்னேஸ்வரன் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் இறுதி தீர்மானத்தை ஐனாதிபதியே எடுக்கவேண்டும் என்ற அடிப்படையில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் யாழ்.பல்கலைக்கழகத்தின் 8வது துணைவேந்தராக இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியை வசந்தி அரசரட்ணத்திடமிருந்து துணைவேந்தருக்கான பொறுப்புக்களை பெற்றுகொண்டார்.