( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கிலங்கை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பக்க்ஷ மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் முப்பதாம் தேதி (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது .
வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் அஜந்தா சுரேஷ் தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த கும்பாபிஷேகத்தை, கும்பாபிஷேக பிரதம குரு கிரதயாதிலகம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சார்யார்கள் நடத்தி வைக்க இருக்கின்றார் .
இதற்கான கிரியைகள் யாவும் எதிர்வரும் 27 ஆம் தேதி வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது.
எண்ணெய் காப்பு சாத்துதல் நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற இருக்கின்றது.


