புகையிரத்தில் மோதுண்டு பலியான யானை!

ஹஸ்பர் ஏ.எச்

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரத வண்டியில் குறித்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால் நடை வைத்தியரின் பிரேத பரிசோதனை இடம் பெறவுள்ளது.