அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” வேலைத்திட்டம்

மாளிகைக்காடு செய்தியாளர்

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் “கல்விக்கு கரம்கொடுப்போம்” வேலைத்திட்டத்தின் கீழ் அண்மையில் தீ அனர்த்தத்தில் சிக்கி தமது பாடசாலை உபகரணங்களை இழந்த மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் நோக்கில் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் உறுப்பினர்களின் அன்பளிப்பாக பாடசாலை உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, சப்பாத்து போன்றன கல்முனை அல் அஸ்கர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர் ஊடாக மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் உறுப்பினர்கள் சார்பில் தவிசாளர் நூருல் ஹுதா உமர், மத்திய செயற்குழு பிரதம பொருளாளர் எல். முஹம்மட் நிப்றாஸ் ஆகியோர் இந்த அன்பளிப்பை வழங்கி வைத்தனர்.

அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் சமூக நல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் கல்வி அபிவிருத்திக்கு பல்வேறு பங்களிப்புக்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.