றிஷாட் பதியுதீனால் மாணவர்கள் கௌரவிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சியின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் நாடாளவிய ரீதியில் நடைபெற்றுவரும் கெளரவிப்பு நிகழ்வின் (ASSAD INSPIRE AWARDS) அடுத்த கட்டமாக மேல்மாகாணம் மற்றும் தென் மாகாண மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (02) இன்று ஞாயிற்றுக்கிழமை (02) கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரி கபூர் மண்டபத்தில் கட்சியின் சட்ட விவகாரங்களுக்கான ஆலோசகரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான சிரேஷ்ட சட்டத்தரணியுமான ருஸ்தி ஹபீப் தலைமையில் இடம்பெற்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் ஹம்மாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களும், சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப்பெற்ற மாணவர்களும் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வுக்கு, பிரதம அதிதியாக மேல் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பதில் தலைவர் நீதிபதி லபர் தாஹிர் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஸாஹிரா கல்லூரி அதிபர் றிஸ்வி மரைக்கார், தென் மாகாண கல்விப் திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் அஷெய்க் மசாஹிம், மேல்மகாண பிரதி கல்விப்பணிப்பாளர் மஹ்சூர், கொழும்பு வலைய பிரதி பண்ணிப்பாளர் மும்தாஸ் பேகம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபான முஸ்லிம் சேவை முன்னாள் பண்ணிப்பாளர் அஹமத் முனவ்வர், கட்சியின் களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(ஊடகப்பிரிவு)