(சுமன்)
மட்டக்களப்பு பாலமீன்மடுவைச் சேர்ந்த அருணன் தமிழீழனின் முள்ளியில் தொலைந்த முகவரிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் லைட்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு, நூல் அறிமுகவுரை, நயவுரை மற்றும் நூலாசிரியர் அறிமுகம் என்பன நிகழ்த்தப்பட்டு. பாராளுமன்ற உறுப்பினர்கள், நூலாசிரியரின் பெற்றோர் மற்றும் நூலாசிரியர் உள்ளிட்டோரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தொடர்ந்து நூலாசிரியால் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிதிகளுக்கு கவிதை நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களாலும், லைட்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தினராலும் கன்னிக் கவிஞர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





