திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு..!

(ஹஸ்பர் ஏ.எச்)

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் ஊடக, கலை, இலக்கிய வழிகாட்டல் செயலமர்வு 31.10.2025 (வெள்ளிக்கிழமை) தி/தி/புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், திருகோணமலை மாநகர சபையின் மேயர் க.செல்வராஜா (சுப்ரா) முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இச்செயலமர்வில், வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன், வாசல் வாசகர் வட்டத்தின் செயலாளர் மற்றும் வாசல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ச.திருச்செந்தூரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒலுமுதீன் கியாஸ் ஷாபி, மூத்த எழுத்தாளர் அமீர்டீன் கே.முகம்மட், ஊடகவியலாளர் பா.விபூசிதன் ஆகியோர் வளவாளர்களாக பங்கேற்று தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில், பாடசாலை உப அதிபர் திருமதி கு.ஹம்ஸத்வனி, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.