சரஸ்வதி பூஜையில் துர்க்கை (3 ),லக்ஷ்மி (3) ,சரஸ்வதி (4) கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா

நவராத்திரி 22ம் திகதி திங்கட்கிழமை பிரதமை ஆரம்பித்து துர்க்கை பூஜை முதலாம் நாள், 2ம் நாள் துதியை 23 செவ்வாய்க்கிழமை பின்னிரவு 4.06வரை துதியை இருக்கின்றது . 3ம் நாள் புதன் திருதியை பின்னிரவு. 5.54 வரை இருக்கிறது .

25 வியாழன் சதுர்த்தி விரத நாள் அன்றைய தினம் 4ம் நாள் மகாலக்ஷ்மிக்கு உரிய பூஜை தொடங்குகின்றது 5ம் நாள் 26 வெள்ளிக்கிழமை சதுரத்தி காலை 7.55 வரை இருக்கின்றது பின் பஞ்சமி தொடங்குகின்றது இது இரண்டாம் நாள் மகாலக்ஷ்மிக்கு உரிய பூஜை . 27ம் நாள் பஞ்சமி 9.57 உடன் முடிவடைந்து சஷ்டி 6ம் நாள் தொடங்குகின்றது அன்று கூடுதலாக சஷ்டி வியாபித்து இருப்பதால மகாலக்ஷ்மிக்கு உரிய மூன்றாம் நாள் பூஜையுடன் மகாலக்ஷ்மிக்கு பூஜை 27 நிறைவடைகின்றது.

அதனை தொடர்ந்து 28 சஷ்டி முற்பகல் 11.49 வரை மட்டுமே இருக்கின்றது அத்துடன் சப்தமி அன்று கூடுதலாக வியாபித்து இருப்பதால் சரஸ்வதி பூஜை ஆரம்பமகின்றது. அன்று சரஸ்வதி பூஜைக்கு உரிய நாள் முதலாம் நாள் 29 திங்கட்கிழமை சப்தமி பிற்பகல் 1.24 வரை இருப்பதால் அன்றைய தினமும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகின்றது அது 2ம் நாள் 30ம் திகதி செவ்வாய்க்கிழமை அட்டமி பிற்பகல் 2.37 வரை இருப்பதால் அதனை தொடர்ந்து நவமியம் தொடங்குகின்றது . அன்று 3ம் நாள் சரிஸ்வதி பூஜை அதனை தொடர்ந்து 1ம் திகதி புதன்கிழமை அன்று நவமி பிற்பகல் 3.21 வரை நவமி திதி வியாபித்து இருப்பதால் அத்துடன் உத்தராட நட்சத்திரமும் கூடியிருப்பதால் அன்றைய தினம் 4 ம் நாளும் மகா நவமி விரதத்திற்குரிய நாளாக சரஸ்வதி பூஜைக்குரிய நாளாக கொண்டாடப்படுகின்றது. அக்டோபர் 2ம் திகதி தசமி பிற்பகல் 3.36 வரை கூடியுள்ளதால் காலையிலே விஜயதசமி செய்து கொள்ளலாம் அதேவேளை 3.00 மணியளவில் மாதம்பூ உற்சவத்தையும் முடித்துகொள்வது சிறப்பானதாகும்.

(இது வாக்கியா பஞ்சாங்கத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ளது )