அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம்- அமைச்சர் விமல் ரத்நாயக்க

அரச ஊழியர்கள் ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் எங்களுடைய கியருக்கு இன்னும் மாறவில்லை என்பது  உங்களுக்கு தெரியும் .நாங்கள் மெது மெதுவாக  கியரை மாற்றிக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கின்றோம்.இன்னும் சில அரசியல் ஊழியர்கள் இருக்கின்றார்கள்.  சில பேர்  ரிவேஸ்  கியரில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் நியூட்டல் கியரில் உள்ளார்கள் இன்னும் முன்னுக்கு அவர்கள்  போடவில்லை என  போக்குவரத்து  நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான அமைச்சர்   விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அம்பாறை – கல்முனை  காரைதீவு இணைக்கும் மாவடிப்பள்ளி பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்த கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

2026 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் மாதம் 7ஆம் திகதி  ஜனாதிபதி அவர்கள் வாசிக்க இருக்கிறார்கள். இதில் நாங்கள் டொன்  கணக்கில்  மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களுக்கு நிதிகளை  ஒதுக்க இருக்கின்றோம். 

 
இதில் கால்வாய்கள் ஆறுகள் வைத்தியசாலைகள் பாடசாலைகள் இவ்வாறு நிதிகளை ஒதுக்க இருக்கின்றோம் .ஏழை மக்களுக்கு அஸ்வசும நிவாரணங்களை வழங்க இருக்கின்றோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம்.ஆனால்  எமக்கு கடந்த 25 வருடங்களுக்கு பல்வேறுபட்ட தடைகள் இருந்தன ஆனால் நாங்கள் இரண்டாவது கியரில் செல்ல வேண்டிய சந்தர்ப்பமும் வந்தது. ஆனால் 2026 ஆம் ஆண்டில் மூன்றாவது கியரை போட்டு முன்னெறி  செல்வோம்.அதுதான் நமது ஜனாதிபதி கூறுகின்ற வசனம்  ஊழல் இல்லாமல் செய்வோம்.

முஸ்லிம் மக்களிடம் ஒன்றினை கேட்க விரும்புகின்றேன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிற்பாடு ஒரு துன்பத்தினை அந்த காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் அனுபவித்தார்கள்அந்த காலத்தில் முஸ்லிம்கள் மிக மன அழுத்தத்துடன் வாழ்ந்தார்கள்

இப்போது நான் ஒன்றைக் கேட்க விரும்பின்றேன். முஸ்லிமாக இருப்பதினால் தற்போது ஏதாவது  இடையூறு உள்ளதா நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்

ஆனால்   வடக்கில் பல இராணுவ சோதனைச் சாவடிகளை பாதுகாப்பு தரப்பினரால் நீக்கி இருக்கின்றோம் .இன்று நீங்கள் அவற்றை  பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.  நான் வடக்கில் பல வேலை திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றேன். வடக்கில் வாழுகின்ற தாய்மார்களுக்கு கடந்த காலங்களில் இந்த மன நிலையில் தற்போது ஆறுதலாக வேலை செய்யக்கூடிய நிலைமை  இருக்கின்றது என அறிய கிடைத்திருக்கிற. ஆனாலும் அவருடைய மனதில் பழைய நினைவுகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும்.

இது தவிர  அந்த பயம் போலீசாரை கண்டால் எங்களுக்கும் இருக்கின்றது.1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சோதனை நடவடிக்கையின் போது ஜேவிபி என அறிந்தால் அவர் வீடு திரும்ப மாட்டார் .அதாவது 87 90 காலப்பகுதியில் அதேபோல தான் இப்போதும் அந்த பயம் உள்ளது (நக்கலாக).எல்லாரும் அந்தக் காலத்தினை அனுபவித்திருக்கின்றோம்.

 
இன்று நாங்கள் தமிழர்களாக முஸ்லிம்களாக சிங்களவர்களாக  எந்த ஒரு அநீதியும் இல்லாமல் ஒரு நிலைமையை உருவாக்கி இருக்கின்றோம்.கொழும்பு அல்லது நாட்டில் உள்ள அரசாங்கம் தேசிய ஒற்றுமை உள்ள அரசாங்கமாக இன்று இருக்கின்றது.
அதாவது கொழும்பு அரசாங்கம் ஆனது இனவாத அரசாங்கம் என இந்த பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள் கூறியிருக்கின்ற நிலையில் அவர்களுடைய வாக்கு வங்கி தற்போது சரிந்து வருகிறது .
 
தற்போது அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் நான் நினைக்கிறேன். ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது அவர்கள் பார்த்திருப்பது இனவாதம் அல்ல இன ஒற்றுமையை தான் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் தமிழர் சிங்கள்  முஸ்லிம்கள் என ஒற்றுமையாகி பயணிப்பதை  அவர்கள் இன்று பார்த்து    பயத்தில்  உள்ளார்கள்.நாங்கள் ஒன்று சேர்ந்து பயணிப்பது என்பது தாய் தந்தையர் ஆகிய உங்களிடம் என்ன என்று  கேட்கின்றேன்.ரமழான் மாதத்தில் முஸ்லீம் மக்கள் நோன்பு பிடிப்பார்கள்.அந்த காலத்தில் தமிழர்களே பௌத்தர்களும் இந்த விடயத்தை செய்ய மாட்டார்கள்.

அதாவது ஒற்றுமையாக இருப்பது என்பது ரமழான் மாதத்தில் முஸ்லீம் மக்களை போன்று தமிழ் மக்களும் பௌத்த மக்களும் அந்த காலத்தில் நோன்பு பிடிப்பது அல்ல. பௌத்தர்கள் வெசாக் கூடு தயாரிப்பார்கள். அதாவது ஒன்று சேர்தல் என்பது பௌத்தர்கள் முஸ்லிம்கள் வெசாக் காலத்தில் வெசாக் கூடு தயாரிப்பது தீபாவளியாக இருக்கட்டும் தைப்பொங்கலாக இருக்கட்டும் தமிழ் மக்கள் பல்வேறுபட்டு விடயங்களை மேற்கொள்வார்கள் நாங்களும் பொங்கல் போய் சாப்பிடுவது தான்.ஆனால் பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் முற்று முழுதாக பொங்கல் தினத்தினை போய்   நடத்த மாட்டோம்.

ஆனால் நாங்கள் மனிதர்களாக ஒன்றுபடுவோம். நாங்கள் இளைஞர்களாக ஒன்றுபடுவோம் .  இலங்கையர்களாக எங்களுடைய கலாச்சார  விழுமியங்கள் வேறுபாடுகள் அவ்வாறே இருக்கின்றது. அதனாலே தான் எங்களது ஒற்றுமைகளை வேற்றுமைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.எனவே தான் இவ்வாறான நாட்டினை நீங்கள் அனைவரும் உருவாக்கி இருக்கிறீர்கள் .ஆகையினால் நாங்கள் இறுதியாக சொல்லப்போவது என்ன இந்த நாட்டில் தேசிய ஒற்றுமை என்ற பாலத்தினை உருவாக்குவதை   விட வேறு எந்த பாலத்தை உருவாக்க முடியும்.

இந்தப் பாலமானது கடந்த வெள்ள அனர்த்தத்தில்  உயிரிழந்த மாணவர்களின் ஞாபகார்த்தத்தின் பயனாக இன்று உள்ளது.இந்தப் பாலத்தின் மறுபக்கம் பார்த்தால் சிங்கள மக்கள் இருக்கின்றார்கள். இந்தப் பாலத்தின் தென்பகுதியில் பார்த்தால் காரைதீவு  பகுதியில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். 

 
இந்தப் பாலத்தின் இடது பக்கம் பார்த்தால் கல்முனை பகுதியில் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள். இதனால் உண்மையிலேயே நாங்கள் பார்க்கின்ற போது தேசிய ஒற்றுமைக்கான பாலம் உண்மையிலேயே இந்த பாலம் தான கூற முடியும். இந்த பாலம் முழு நாட்டிற்கும் தேசிய ஒற்றுமைக்குமாக தேசிய மக்கள் சக்தியினால்  கட்டப்பட்ட பாலமாகும்.என குறிப்பிட்டார்.