வங்காலை மன்.புனித ஆனாள் கல்லூரியில் முத்தமிழ் விழா

வாஸ் கூஞ்ஞ 
வங்காலை மன்.புனித ஆனாள் வித்தியாலயத்தில் நீண்ட காலத்திற்குப் பின் முத்தமிழ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மன்.புனித ஆனாள் வித்தியாலயதிற்கு அன்மையில் புதிய அதிபராக சி.எஸ்.சிவகுமார் நியமனம் பெற்றபின் இப்பாடசாலையில் மாணவர் பாராளுமன்றம் சிறப்பாக நடந்த குறிகிய காலத்திற்குள் கடந்த வியாழக்கிழமை (18.09) முத்தமிழ் விழாவும் மிக  சிறப்பாக நடைபெற்றது.

இப்பாடசாலையின் மாணவர்களின் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் கடந்த பல வருடங்களாக மேடையேற்றப்படாமல் இவர்களிடம் இலை மறை காயாக இருந்த நிலையில் கடந்த வியாழக் கிழமை இவ் முத்தமிழ் விழா கொண்டாடப்பட்ட போது இவர்களின் திறமைகளை கண்டு இவ்விழாவுக்கு வருகை தந்த யாவரும் வியந்து இந்த மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.

இது தொடர்பாக இக்கல்லூரியின் அதிபர் சீ.எஸ்.சிவகுமார் தெரிவிக்கையில் மாணவர்களின் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் பங்குப் பெறச் செய்து வெற்றிகளை பெறுவது மட்டுமல்லாது எமது கல்லூரியின் நற்பெயரையும் நிலைப்பெறச் செய்கின்றது.

இம்மாணவர்களிடம் மறைந்திருந்த முத்தமிழும் இன்று மேடையேற்றப்பட்டு அவர்களின் திறமைகளை வெளிக்கொணர வாண்மைத்துவம் மிக்க தமிழ் பாட ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் ஏனைய ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் சங்கம் வங்காலை பங்குத் தந்தை அருட்பணி லக்கோண்ஸ் பிகிராடோ அடிகளார் வங்காலை மண்ணின் மைந்தன் அருட்பணி எவறஸ்ட் அடிகளார் மற்றும் வங்காலை சமூகத்தின் ஒத்துழைப்பில் இந்த முத்தமிழ் விழா நீண்ட காலத்திற்கு பின்பு எல்லோரும் போற்றுமளவுக்கு இந்த மாணவர்கள் தங்கள் திறiமாளை வெளிக் கொணர்ந்தமைக்கு அதிபர் நன்றியும் தெரிவித்தார்.

இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக மன்னார் கல்வி வலய தாபனம் மற்றும் பொது முகாமைத்துவ பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜூ.என்.ஆதவன்

சிறப்பு விருந்தினர்களாக  மன்னார் தமிழ் தனிக்கல்விப் பணிப்பாளர் சி.பூபாலசிங்கம் – நானாட்டான் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்வரன் பச்சேக்

கௌரவ விருந்தினர்களாக வங்காலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.லக்கோன்ஸ் பிகிறாடோ – ஓய்வுநிலை அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் – ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எம்.ஆபேல் றெவ்வல் மற்றும் வங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.செனவிரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.