மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜாவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.தற்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் திருமதி ஜே.ஜே முரளிதரன் 26.09.2025 அன்று தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் நிலையில் அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்காக பொதுநிருவாகம் மாகாணசபைகள் மற்றும் மாகாண நீர்வள அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
தற்போது கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக பணியாற்றும் அருள்ராஜா 01.09.2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்ட இவர் 01.01.2024 அன்று விசேட தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டார்.
ஜெ.எஸ்.அருள்ராஜ், கிண்ணியா உதவி பிரதேச செயலாளர் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் முன்னாள் திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் என பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.
தனது 50வது வயதில் மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
.


