நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்!

2025 செப்டம்பர் மாதத்தின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று (09) தொடங்குகிறது.

அதன்படி, நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடும் என்று நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு குறித்து 2025 பெப்ரவரி 12 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இது அரசியலமைப்பின் 157 ஆவது பிரிவுக்கு அமைய, இப்பிரேரணையானது ஆதரவாக வாக்களிப்போரில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

வாக்கெடுப்பானது இன்று மாலை 05.00 மணிக்கு இடம்பெறும்.