யாழில் கத்திக் குத்து ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்