கடம்பன் மாலை இறுவட்டு வெளியீடு நேற்று (21) இடம்பெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மீது பாடப்பட்ட 07 பாடல்கள் அடங்கிய இறுவட்டு மூலம் ஆலய தலைவர் இ.தட்சணாமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஆலயம் சூழ்ந்துள்ள இயற்கை சூழலுடன், மகிமைகளும், வரலாறுகளும், அடியவர்களுக்கான அற்புதங்களும் அடங்கிய வகையில் வெளியிடப்பட்ட இந் நிகழ்வில் சுவாமி நீலமாதவானந்தா மகராஜ் – மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஆன்மீக அதிதியாகவும், பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளீதரன் அவர்களும், பிரதேச செயலாளர்கள், தவிசாளர்கள், முன்னாள் ஆலய தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மாவட்ட இந்த ஆலய ஒன்றியம், திருவிழாக்கிராமங்களின் நிருவாகிகள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முன்னாள் ஆலய பரிபாலன சபையின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்












