மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு கோட்டமட்ட சாதனையாளர் பாராட்டு நிகழ்வு 03.07.2025ஆம் திகதி வியாழக்கிழமை கன்னன்குடா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி கௌவிக்கப்பட்டனர். இவ்;வருடம் நடைபெற்ற கோட்டமட்டத்திலான தமிழ்மொழித்தினம், ஆங்கிலத்தினம், விளையாட்டுப் போட்டி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியவர்களே பாராட்டப்பட்டனர்.
மேலும், புள்ளிகளின் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல்மூன்று நிலைகளையும் பெற்ற பாடசாலைகளுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வுலய வரலாற்றில் முதன்முறையாக கோட்டமட்டத்தில் நடாத்தப்பட்ட சாதனையாளர் பாராட்டு நிகழ்வு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் க.ரகுகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான சிவசங்கரி கங்கேஸ்வரன், வை.சி.சஜீவன், திருமதி.ரி.உதயகரன், த.யசோதரன், அ.ஜெயகுமணன், உதவிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.சக்திதாஸ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன், உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரகுமார், பாட இணைப்பாளர்களான பு.சதீஸ்குமார், ரி.தங்கேஸ்குமார், தேசியமட்ட சாதனை மாணவி சி.திவ்யா போன்றோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறான மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.






