மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய விளையாட்டு போட்டி இறுதி நிகழ்வுகள் இன்று(30) திங்கட்கிழமை மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன.
இதன்போது, வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகள் மைதானத்தினை சுற்றி பவனி வந்தன. மேலும் தீபம் ஏற்றல், பாண்டு வாத்திய கண்காட்சி, காற்பந்தாட்ட போட்டி, உடற்பயிற்சி கண்காட்சி, விளையாட்டு போட்டிகள் போன்றனவும் நடைபெற்றன.
வலயமட்ட விளையாட்டு போட்டியில் சிறந்த பெறுபேறுகளை வெளிக்காட்டிய பாடசாலைகளுக்கும், சம்பியன்களை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட செயலாளர் திருமதி ஜே. ஜே. முரளிதரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் இ. திரேசகுமாரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பி.ஜெயகுமார், ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். முருகேசபிள்ளை ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.










