ம.தெ.எ.பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவு இன்று (12) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தவிசாளராக மே.வினோராஜ் மற்றும் ச.கணேசநாதன் ஆகியோர் சபையினால் முன்மொழியப்பட. உள்ளூராட்சி ஆணையாரினாரின் வழிகாட்டுதலுக்கு அமைய இராகசிய வாக்கெடுப்பின் மூலம் மே.வினோராஜ் அவர்கள் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். பிரதி தவிசாளருக்கு இருவர் போட்டியிட்ட நிலையில் எருவில் வட்டாரத்தை சேர்ந்த அ.வசீகரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.