உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்தி வரை சுத்தப்படுத்தலும் மரநடுகையும் நேற்று (05) இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபை, மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பாடசாலை சுகாதார கழகம் மற்றும் பொதுமக்கள் என்பன இணைந்து மண்முனை பாலம் தொடக்கம் மகிழடித்தீவு சந்தி வரையான 2 கிலோமீட்டர் ஆற்றை அண்டிய கரையோர பகுதியில் காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன் , மரநடுகையிலும் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி, சுற்றாடல் உத்தியோகத்தர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்களங்கள், அதிகார சபைகள் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.