(எருவில் துசி) எருவில் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று மாலை (03) எருவில் பெத்தான்குடி மக்களினால் கல்விக்கு மகுடம் சூட்டும் கௌரவிப்பு நிகழ்வு அதன் தலைவர் சா.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் ஆலயத்தின் வெளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கடந்த காலங்களில் எருவில் கிராமத்தில் இருந்து மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐந்து (05) மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் எருவில் கிராத்தை சார்ந்த சமூகசேவகர் அ.வசீகரன் அதாவது இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பாக எருவில் வட்டாரத்துக்கு பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு பிரதி தவிசாளர் என எதிர்பாக்கப்படுபவரும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது..
நிகழ்வில் விசேட, சிறப்பு, கௌரவ அதிதிகளாக கீழ் குறிப்பிடப்படுபவர்களும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. வைத்திய அத்தியட்சகர் க.புவனேந்திரநாதன், உதவி கல்விப்பணிப்பாளர் செ.சுரேஸ், அதிபர் சி.தீபதர்சன் மற்றும் கண்ணகி அம்பாள் ஆலய பரிபான சபைத் தலைவர் மா.சுந்தரலிங்கம் ஆலய செயலாளர் க.அருள்ராசா, மணியகாரர் சோ.திணகரன்பிள்ளை நிருவாக சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் சிறுவர்களின் சிறப்பு நடனங்களும் அருமையாக காண்பிக்கப்பட்டது இறுதியில் தி.யாதவரூபன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.