மண்முனை தென்மேற்கு கோட்டமட்ட தமிழ் மொழித்தின வெற்றி பாராட்டு நிகழ்வு இன்று(19.05.2025) திங்கட்கிழமை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் மூ.உதயகுமாரன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் அதிகூடிய புள்ளிகளை பெற்ற பாடசாலைகளுக்கு வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வகை 1AB, 1C தரப்படுத்தலில் மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம் முதலிடத்தையும், முதலைக்குடா மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. வகை II பாடசாலை தரப்படுத்தலில் கடுக்காமுனை வாணி வித்தியாலயம் முதலிடத்தையும், கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், பண்டாரியாவெளி நாமகள் வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. மேலும் மாணவர்களின் நிகழ்ச்சிகளும் ஆற்றுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. தே.உதயகரன், உதவிக்கல்விப் பணிப்பாளார் பு.சதீஸ்குமார், ம. லச்சுதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







