மண்முனை தென்மேற்கில் பாரிய வளர்ச்சியை கண்ட ரிஎம்பிவி

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள மண் முனை தென்மேற்கு பிரதேச சபையை எந்த ஒரு கட்சியும் தனித்து ஆள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பத்து வட்டாரங்களை கொண்ட இச்சபை எல்லையில் 16 உறுப்பினர்கள் சபைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர். இதில் 10 பேர் வட்டார முறையிலும் ஆறு உறுப்பினர்கள் விகிதாசார முறையில் இருந்தும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அவ்வகையில் இலங்கை தமிழரசி கட்சியில் இருந்து ஐந்து உறுப்பினர்கள் வட்டாரத்திலும் ஒரே உறுப்பினர் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேபோல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து மூன்று உறுப்பினர்கள் வட்டார முறையிலும் மூன்று உறுப்பினர்கள் விகிதாசார முறையில் செய்யப்பட்டுள்ளனர். சுயேட்சை குழுவில் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர், இதில் இரண்டு பேர் வட்டார முறையிலும் ஒருவர் விகிதா சார முறையிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியிலிருந்து நேரடியாக வட்டாரத்தில் எந்த ஒரு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவில்லை. ஆனால் விகிதாசார முறையில் ஒருவர் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் எந்த கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தாலும் இன்னொரு கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழரசி கட்சிக்கும் ஒரே அளவிலான ஆசனங்கள்  கிடைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆறு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இரு கட்சிகளும் இணைந்தால் இலகுவாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இரு கட்சிகளும் இணைவதற்கான எந்த விதமான சாத்தியமும் இல்லை. அடுத்த வாய்ப்பாக இருப்பது சுயேட்சை குழுவுடன் இணைவதாகும். சுயேச்சை குழு உடன் எந்த கட்சியினைகின்றதோ அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்ளும். இரு கட்சிகளும் சுயேச்சை குழு உடன் பேசி வருவதாக தகவல் கிடைக்கின்றது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் இரண்டுக்கும் இடையிலான வித்தியாசங்களை உற்று நோக்குகின்ற போது 2018 ஆம் ஆண்டில் இலங்கை தமிழரசி கட்சி வட்டாரத்தில் 5 ஆசனங்களையும் விகிதாசார முறையில் இரண்டு ஆசனங்களை பெற்று மொத்தமாக ஏழு ஆசனங்களை பெற்றிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி மூன்று ஆசனங்களை வட்டாரத்தில் பெற்றிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரத்தில் எந்த விதமான வெற்றியை பெறாவிட்டாலும் விகிதா சார முறையில் மூன்று ஆசனங்களை பெற்றிருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காட்சி வட்டாரத்தில் ஒரு ஆசனங்களை பெற்று இருந்தது. இதை விட இலங்கை சுதந்திரக் கட்சி நேரடியாக வட்டாரத்தில் ஆசனத்தினை பெறவிட்டாலும் விகிதாசார முறையில் ஒரு ஆசனத்தை பெற்றிருந்தது. சுயேட்சைக்குழு ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தது.

அவ் வகையில் நோக்குகின்ற போது தமிழரசு கட்சி கடந்த 2018 ஆம் ஆண்டை போன்று இந்த வருடமும் ஐந்து ஆசனங்களை வட்டாரத்தில் பெற்றிருக்கின்றது ஆனால் 2018ல் 2 ஆசனங்களை விகிதாசார முறையில் பெற்றிருந்த நிலையில் 2025-ல் ஒரு ஆசனத்தினை பெற்று இருக்கின்றது இதன் மூலம் ஒரு ஆசனத்தினை தமிழரசி கட்சி இந்த வருடம் இழந்து இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை நோக்கும்போது 2018 ஆம் ஆண்டில் ஒரு ஆசனத்தை பெற்றிருந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் நேரடியாக வட்டாரத்தில் மூன்று ஆசனங்களையும் விகிதாசார முறையில் மூன்று ஆசனங்களுமாக ஆறு ஆசனங்களை பெற்றிருக்கின்றது இதன் மூலம்  பெரு வளர்ச்சியை பெற்றிருக்கின்றது.  தமிழரசு கட்சி வீழ்ச்சியை தழுவிஇருக்கிறது.  2018ல் தமிழரசி கட்சி அரசடித்திவு, முனைக்காடு தெற்கு ஆகிய வட்டாரங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் இந்த 2025-ல் தோல்வியை தழுவி இருக்கின்றது