YUKன் சித்திரைக் குதூகலம் 2025.

YUKன் சித்திரை குதூகலம்  2025ம் ஆண்டுக்கான பல்வேறு சுவரஸ்யமான விளையாட்டுக்கள் கடந்த மாதம் முதல் நடாத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கரைப் பந்து சுற்றுப்போட்டியானது எருவில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது அதற்கான முதலாம் இடத்தினை கோயில் போரதீவு உதயதாரகை விளையாட்டுக் கழகம்  பெற்றுக்கொண்டது மேலும் உதைபந்து சுற்றுப்போட்டியானது எருவில் கண்ணகி மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இன்டிபென்ரன் விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தினை  பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்ளுர் அணிகளுக்கிடையிலான கிரிகட் சுற்றுப்போட்டியானது எருவில் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் எருவில் இன்டிபென்ரன் விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. தொடர்ந்து கபடி சுற்றுப்போட்டியானது எருவில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில்  நடைபெற்றது. மேலும் ஆண்களுக்கான துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டியானது அகில இலங்கை ரீதியில் நடைபெற்றமையும் சிறப்பம்சமாகும் மேலும் கலப்பு துவிச்சக்கர வண்டி ஓட்டப்போட்டியானது மிகவும் சுவரஸ்யமாக கணவன் மணைவியை பின் இருக்கையில் வைத்து நடாத்தப்படட போட்டியாக நடைபெற்றது

YUKன் இறுதி கலாசார விளையாட்டு விழாவானது எதிர்வரும் 10.05.2025ந் திகதி கண்ணகி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் கலை நிகழ்வுடன் கூடிய iகௌரவிப்பு நிகழ்வானது 17.05.2025ந் திகதி நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டடாளர்கள் தெரிவித்தனர்.