மன்னாரில் கணடல் தாவரம் அழியாதிருக்க முன்னெடுப்புக்கள்.

( வாஸ் கூஞ்ஞ) 12.04.2025

மன்னார் மற்றும் பூநகரி கடற் பிரதேசப் பகுதியில் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு வருவதுடன் காலநிலை மாற்றத்தால் கடலோர கண்டல் தாவரங்களும் சமுத்திர மழைக்காடுகளும் சேதப்படுத்தப்பட்டு வருவதைக் கவனத்தில் கொண்டு இவற்றை புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தற்பொழுது மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஓரிரு நிறுவனங்களின் உதவியுடன் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் ‘வீகேன்’ அமைப்பு இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது

மன்னார் மாவட்டம் மற்றும் பூநகரி கடற் பிரதேசப் பகுதியில் இயற்கை காடுகள் அழிக்கப்ட்டு வருவதுடன் காலநிலை மாற்றத்தால் கடலோர கண்டல் தாவரங்களும் சமுத்திர மழைக்காடுகளும் சேதப்படுத்தப்பட்டு இப்பகுதியில் கணவாய் , நண்டு . இறால் போன்ற விலைப்படு கடல் உற்பத்திகள் கனிசமான அளவு குறைந்து வருவது கவனத்pல் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கவனம் செலுத்தியுள்ள ஆர்வலர்கள் மற்றும் ‘மினிஷ்ரி ஒவ் கிரேப்’ நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையினால் யுன்டீபீ , ஜூஈஎவ் (உலகளாவிய சூழவியல் வசதி) ஆகிய நிறுவனங்களின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் ‘வீகேன்’ அமைப்பின ;ஊடாக மன்னார் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் கண்டல் தாவரங்களை நடும் பணிகள் இடம்பெறுகின்றன.

இதற்கமைய வெள்ளிக்கிழமை (11.04) மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கீலிக்கரையான்பிட்டி மீன்பிடிப் பிரதேசத்தில் கடலோரப் பகுதிகளில் காலநிலை மாற்றப் பாதிப்புக்களை நிவர்த்தி செய்ய சதுப்பு நிலக்காடுகளை மீட்டெடுக்கும் செயற்திட்டத்தில் 2024 – 2025 ஆகிய ஆண்டுகளில் 7500 கண்டல் தாவரங்களை நடுவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு இது வெள்ளிக்கிழமை (11.04) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ‘யுன்டீபீ’ , ‘ஜூஈஎவ்’ அமைப்பைச் சேர்ந்த திருமதி டிலிசா , இணைப்பாளர் திருமதி ஜெயவதனி அறிவு , முகாமைத்துவம் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ‘வோவேகோட்’ நிறுவனத்தின் பிரதானி திரு.தர்மலிங்கம் கணேஸ் , கடற்தொழில் சார்பான பிரமுகர்கள் , கடற்தொழிலாளர்கள் மற்றும் வன இலாகா திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளையில் கடந்த ஏப்பிரல் 1 . 2 . 3 ஆகிய திகதிகளில் மன்னார் பாலத்தடி பகுதியில் றோக்கியோ சீமெந்து நிறுவனம் 5000 கண்டல்தாவரங்களையும் மன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் ‘வீகேன்’ அமைப்பின் ஊடாக நடுவதற்கான முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது