எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற போரதீவுபற்று வெல்லாவெளி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் நேற்று (10) போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கே.இளங்குமுதன், சிறப்பு அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், மட்டக்களப்பு மாவட்ட கிராம உத்தியோகத்தர் ,
மற்றும் கணக்காளர் தி.அம்பிகாபதி, சிரேஷ்ட தையல் போதனாசிரியர் என்.ரவிச்சந்திரன் அம்மணி வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் ஏ.ஜெயபிரதாபன், வெல்லாவெளி இலங்கை வங்கி முகாமையாளர் ஜீ.அரவிந்தன் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கிராம மற்றும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தையல் போதனாசிரியர் மற்றும் 2024 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற மாணவிகள் ஒழுங்கமைப்பு செய்ததுடன், நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் முகமாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பயிற்சி பெற்ற மாணவிகளும் தமது பயிற்சியின் பயன்பாட்டினை எடுத்துக்காட்டும் முகமாக அவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களினை காடசிப்படுத்தி விற்பனை செய்தனர்.